விஜய் சேதுபதி லைன் அப்பில் வரிசையாக 6 படங்கள் இருக்கிறது. 50வது படம் மகாராஜா கொடுத்த அதிரிபதிரி ஹிட்டால் பல தயாரிப்பாளர்கள் இவர் கால் சீட்டுக்காக க்யூவில் நிற்கிறார்கள். கோடம்பாக்கத்தில் இப்பொழுது இவர் பக்கம்தான் காற்று வீசுகிறது
வருடத்திற்கு 8 முதல் 10 படங்கள் நடித்து தள்ளும் விஜய் சேதுபதி இப்பொழுது செலெக்ட்டிவ் கதைகளை தேர்ந்தெடுக்கிறார். கிட்டத்தட்ட 3 வருடங்கள் படங்களை கமிட் செய்து வைத்திருக்கிறார்.அத்தனை படங்களும் தன்னை தூக்கி விட்ட நண்பர்களுக்காக பண்ணப் போகிறார்.
நண்பர்களுக்கு தோள் கொடுக்கும் மக்கள் செல்வன்
பாண்டிராஜ்: எப்பொழுதுமே கிராமத்து கதைகளையே எடுக்கும் இயக்குனர் பாண்டிராஜ். இப்பொழுது விஜய் சேதுபதிக்காகவும் ஒரு கிராமத்து கதை பண்ணுகிறார். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கியவர் இவர்தான.
பாலாஜி தரணிதரன்: விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர் தரணிதரன்.இவர் விஜய் சேதுபதிக்காக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதாக்காதி போன்ற சூப்பர் ஹிட் படங்களை எடுத்துள்ளார்.விஜய் சேதுபதி சினிமா கேரியரில் டர்னிங் பாயிண்ட் கொடுத்தவர் பாலாஜி தரணிதரன்
அயலான் ரவிக்குமார்: எப்பொழுதுமே சினிமாவை வித்தியாசமாக கையாளுபவர் ரவிக்குமார். இன்று நேற்று நாளை, அயலான் போன்ற சயின்ஸ் பிக்சன் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். இவரிடமும் ஒரு கதையை கமிட் செய்து வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
நித்திலன் சுவாமிநாதன்: திரைக்கதையில் நான் தான் கிங் என நிரூபித்தவர் நித்திலன். விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா இவர் தான் இயக்கினார். 50 நாட்களுக்கு மேல் இந்த படம் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது.
கார்த்திக் சுப்புராஜ்: பீட்சா, இரவி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவருடன் இணைந்து வேலை செய்து இருக்கிறார். அடுத்து விஜய் சேதுபதியின் லைன் அப்பில் இவரும் இருக்கிறார். தற்சமயம் சூர்யா 44 படத்திற்காக கதை எழுதி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ். இது போக ஒரு வெப் தொடரிலும் நடிக்கிறார் மக்கள் செல்வன்.
- பழைய சண்டையை மறந்து விஜய் சேதுபதிக்கு பழம் விட்ட ஸ்ருதிஹாசன்
- ஹீரோ இமேஜுக்காக 5 கோடி சம்பளத்தை கம்மியாக்கிய விஜய் சேதுபதி
- முதல் ஆறு மாதத்தில் நம்ம சினிமாவை தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 படங்கள்