வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஒரு படம் கூட தோல்வி இல்லாத 3 இளம் இயக்குனர்கள்.. ஹீரோக்களின் சாய்ஸாக இருக்கும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா தற்போது உலகத்தரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பலரும் வியக்கும் வகையில் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும் பல டெக்னாலஜிகள் தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்கள் சிறந்த படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

அதில் தற்போது பல முன்னணி நடிகர்களும் இவர்களின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அளவுக்கு மூன்று இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பெற்றுள்ளனர். இவர்கள் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இதுவரை தோல்வி பெற்றதே கிடையாது.

அவர்கள் வேறு யாருமல்ல தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அட்லி, வெற்றிமாறன் இவர்கள் தான். மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இதுவரை கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய நான்கு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூடியது. அதில் மாஸ்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படமும் பல கோடி வசூலை வாரி குவித்து வருகிறது.

இவரை அடுத்து இயக்குனர் அட்லி ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் போன்ற அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.

அதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த ஐந்து திரைப்படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதிலும் ஆடுகளம், அசுரன் போன்ற திரைப்படங்கள் தேசிய அளவில் பல விருதுகளை வாங்கி குவித்தது.

இதனால் இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சூர்யாவின் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தையும் இவர் இயக்க இருக்கிறார். இந்த மூன்று இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர்களாக இருக்கின்றனர்.

Trending News