
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இருவரும் 40 வயதை தாண்டிய போதிலும் கொஞ்சம் கூட தங்களுடைய கேரியருக்கு ஆபத்து வராத அளவிற்கு பார்த்துக் கொள்கிறார்கள். பத்து கோடிகளுக்கு மேல் சம்பளமும் வாங்கி வருகிறார்கள்.
இருவரும் இன்றுவரை லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். விஜய், அஜித், கமல், போன்ற நடிகர்களுக்கு மாறி மாறி இவர்கள் தான் ஹீரோயினாக நடிக்கிறார்கள். நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தில் பிஸியாக நடித்த வருகிறார். விடாமுயற்சி படத்துக்கு பின் த்ரிஷாவிற்கு தக்கலைப் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
வருங்கால நயன்தாரா, திரிஷாவாக 3 நடிகைகள் வலம் வர இருக்கிறார்கள். இவர்கள் தான் இப்பொழுது எல்லா படங்களிலும் ஒப்பந்தமாகி, அவர்கள் இரண்டு பேருக்கும் ஆட்டம் காட்டி வருகிறார்கள். அவர்கள் அளவுக்கு சம்பளம் கொடுக்காவிட்டாலும் நான்கில் இரண்டு பங்கு கொடுத்தால் போதும் என்ற அடிப்படையில் தயாரிப்பாளர்கள் இந்த நடிகைகளுக்கு வலை வீசுகிறார்கள்.
மம்தா பஜுலு: பிரேமலு படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் அள்ளியவர் மம்தா. இப்பொழுது இவர்தான் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடிக்கிறார். STR 48 படத்தில் நடிக்கவும் பேசப்பட்டு வருகிறார்.
கயாடு லோகர்: டிராகன் படத்தில் அறிமுகமான இவர் கைவசம் ஐந்து தமிழ் படங்கள் வைத்திருக்கிறார். மம்தா பஜுலு அல்லது கயாடு லோகர் இவர்கள் இருவருள் யாரேனும் ஒருவர் தான் எஸ் டி ஆர் 48 படத்திற்கு ஹீரோயினாக வரப்போகிறார்கள்.சூர்யாவின் அடுத்த படத்திற்கும் பேசப்பட்டு வருகிறார்.
அனுபமா பரமேஸ்வரன்: பிரேமம் புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பைசன், லாக் டவுன் போன்ற எக்கச்சக்க படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். துருவ் விக்ரமுடன் தற்போது பைசன் படத்தில் ஜோடி போட்டு வருகிறார். இவருக்கும் தமிழில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.