வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

30 நாளை கடந்து வாரிசு படத்தின் வசூல் ரிப்போர்ட்.. தில்ராஜுக்கு விழுந்த அடி

விஜய்யின் வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி துணிவு படத்திற்கு போட்டியாக வெளியானது. இப்படம் கிட்டத்தட்ட 30 நாட்களைக் கடந்து தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை பார்க்கலாம்.

அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வாரிசு படம் 147 கோடி வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கேரளாவில் 12 கோடி, கர்நாடகாவில் 15.75 கோடி, தெலுங்கானா 25 கோடி, நார்த் இந்தியாவில் 16.26 கோடி மற்றும் வெளிநாடுகளில் 90 கோடி வாரிசு படம் வசூல் செய்துள்ளது.

Also Read : விஜய்யை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கும் உதயநிதி.. லியோவுக்கு போட்டியாக இறங்கும் பிரம்மாண்ட படம்

இந்நிலையில் மொத்தமாக உலகம் முழுவதும் 306.01 கோடி இதுவரை வாரிசு படம் வசூல் செய்திருக்கிறது. தில் ராஜு, வாரிசு படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 100 கோடி வசூல் செய்யும் என்றும் அதில் 50 கோடி ஷேர் கிடைக்கும் என்று கணித்திருந்தார். ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படம் பெரிய அடி வாங்கி உள்ளது.

அதாவது அங்கு வாரிசு படம் 25 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதில் 13 கோடி மட்டும் தான் தில் ராஜுக்கு ஷேர் கிடைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் விநியோகஸ்தரான லலித் தில் ராஜுவிடம் வாரிசு படத்தை 60 கோடி கொடுத்து வாங்கி இருந்தார். இந்நிலையில் மதுரை மற்றும் சென்னை போன்ற இடங்களை வேறு விநியோகஸ்தருக்கு லலித் விற்றிருந்தார்.

Also Read : பணத்தாசையால் கேரியரை தொலைக்கும் 3 டாப் ஹீரோக்கள்.. வாரிசு விஜய்யின் லிஸ்டில் இணைந்த தனுஷ்

அதன்படி உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வாரிசு படம் மூலம் 4.35 கோடி லாபம் கிடைத்தது. இந்நிலையில் தமிழ்நாட்டு திரையரங்குகள் வாரிசு படத்தை ரிலீஸ் செய்ததன் மூலம் லலித்துக்கு 67 கோடி ஷேர் கிடைத்தது. இதில் ஏற்கனவே வாரிசு படத்தை லலித் 60 கோடி வாங்கி இருந்ததால் மீதம் உள்ள தொகை 7 கோடி தான்.

ஆனால் அதிலும் வாரிசு படத்தின் பிரிண்ட் மற்றும் விளம்பரத்திற்காக லலித் 5 கோடி செலவு செய்துள்ளார். ஆகையால் லலித்துக்கு வாரிசு படத்தின் மூலம் கிடைத்த லாபம் என்றால் வெறும் 2 கோடி மட்டும் தான். இதன் மூலம் அவருக்கு பெரிய லாபத் தொகை கிடைக்கவில்லை என்றாலும் விஜய் இந்த படத்தை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டதால் லலித் வாரிசு படத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் தில்ராஜுக்கு வாரிசு படம் மூலம் மொத்தமாக 38.50 கோடி லாபம் கிடைத்துள்ளது.

Also Read : வாரிசு படத்தில் ஒரே சீனுக்கு 20 கோடி செலவு பண்ணி, கட் பண்ணிட்டாங்க.. தில் ராஜுவை கிழித்து தொங்க விட்ட தயாரிப்பாளர்

Trending News