வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

30 வருஷம் இந்த மனுசன அசைக்க முடியாது.. மிஷ்கின் பாராட்டிய அந்த இயக்குனர் யார் தெரியுமா?

Mysskin: மிஷ்கின் ஆரம்பத்தில் இயக்கிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபகாலமாக பெரிய அளவில் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் டைரக்ஷன் ஒருபுறம் இருக்கட்டும் என நடிகராக களம் இறங்கி இருக்கிறார். அதுவும் பெரும்பாலான படங்களில் வில்லனாக தான் மிஷ்கின் நடித்து வருகிறார்.

அந்த வகையில் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ள மாவீரன் படத்திலும் அரசியல்வாதி கெட்டப்பில் வில்லனாக மிரட்டி விட்டிருக்கிறார். இதன் ட்ரைலரை பார்க்கும்போதே படத்தைப் பார்க்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read : காலம் கடந்து பேசும், ரஜினியின் கடைசி இயக்குனர் இவர் தான்.. மிஷ்கின் கொடுத்த அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

இந்நிலையில் மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வின் பற்றி பேசி இருந்தார். அதாவது யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கியவர் இவர்தான். இப்போது சிவகார்த்திகேயனின் படம் அவருக்கு கிடைத்து இருந்தது.

அவ்விழாவில் மிஷ்கின் பேசுகையில், இப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் தன்னை வைத்து செய்து விட்டதாக தெரிவித்தார். அதாவது ஒரு இயக்குனர் நடிகராக இருக்கும் போது பல்வேறு சிக்கலை சந்திக்க நேரிடும். ஸ்கிரிப்ட் தனது கையில் இருப்பதால் இந்த காட்சியை இப்படி எடுக்கலாம் என்று தனக்கு தோன்றும்.

Also Read : எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்.. மிரட்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ட்ரெய்லர்

ஆனால் மடோன் அஸ்வின் வேறு மாதிரியாக எடுப்பார். அப்போது அவரை அழைத்து இந்த காட்சியை இப்படி எடு என்று சொன்னால் எல்லாத்துக்கும் தலையாட்டுவான். ஆனால் கடைசியில் போய் பார்த்தால் அவன் விருப்பப்படி தான் அந்த காட்சியை எடுத்திருப்பான். ஒரு இயக்குனர் என்பவன் இப்படி தான் இருக்க வேண்டும்.

தான் ஒரு விஷயத்தை இப்படிதான் எடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதிலிருந்து யார் சொன்னாலும் பின் வாங்க கூடாது. அந்த விஷயத்தில் மடோன் அஸ்வினை தனக்கு மிகவும் பிடித்ததாக மிஷ்கின் புகழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி இன்னும் 30, 40 வருஷத்திற்கு படங்களை மடோன் அஸ்வின் இயக்குவார் என்றும் கூறியுள்ளார்.

Also Read : கவினுக்காக விட்டுக் கொடுத்த மிஷ்கின்.. வெளியில முரடாக இருந்தாலும் தங்கமான மனசு

Trending News