வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

300 கோடி நஷ்டத்தை ஈடு கட்டிய மலையாள படம்.. விஜய் சேதுபதியை வைத்து லைக்கா போடும் பலே ஸ்கெட்ச்

Actor Vijay Sethupathi: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்ட முன்னணி கதாநாயகன் தான் விஜய் சேதுபதி. தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளில் ஆர்வம் காட்டி வரும், இவரை வைத்து லைக்கா போடும் திட்டம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

முன்னணி கதாநாயகனாகவும், வில்லனாகவும் தான் ஏற்கும் கதாபாத்திரங்களை சிறப்புடன் நடித்து வருகிறார். தற்போது இவரின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பி உள்ளது. அதை தொடர்ந்து எப்பொழுதும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் இவர் மலையாள மொழி படங்களிலும் கமிட்டாக போகிறாராம்.

Also Read: பெண் பிள்ளைகளால் கண்ணீர் வடித்து அசிங்கப்படும் அப்பா பிரபலங்கள்.. 2 மகள்களால் பறிபோன ஷங்கரின் நிம்மதி

மலையாள படங்களை பொறுத்தவரை, நம் தரப்பில் ஆஹா ஓஹோன்னு பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அங்கேயும் படம் சரியாக ஓடாமல் நஷ்டம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு எடுக்கும் படங்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை. அதற்கு உதாரணமாக 2022 காலகட்டத்தில் சரிவர எந்த படமும் ஓடாததால், சுமார் 300 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த 2018 படம், மலையாள சினிமாவை புரட்டி போடும் விதமாய் பார்க்கப்பட்டது. டோவினோ தாமஸ், கலையரசன் நடித்து வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று சுமார் 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அடைந்தது.

Also Read: யோகி பாபு கதையை திருடிய சிவகார்த்திகேயன்.. மட்டமாக வெற்றியை பார்க்க துடிக்கும் கொடுமை

இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் கதையாய் இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்-க்கு இப்படம் நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து இவரின் மார்க்கெட் சற்று உயர்ந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. மேலும் வெற்றி படத்தை கொடுத்த இவர் படங்களில் வாய்ப்பு கேட்டு வரும் ஹீரோக்களும் உண்டு.

இந்நிலையில் லைக்கா ஜூட் ஆண்டனி ஜோசப்பை வைத்து படம் எடுக்க திட்டம் தீட்டியுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி மற்றும் விஜய் சேதுபதி இணைய போவதாக கூறப்படுகிறது. தற்பொழுது பாலிவுட்டில் வில்லன் கதாபாத்திரம் ஏற்ற விஜய் சேதுபதி இப்படத்தில் எந்த ரோலில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Also Read: 90களில் பயமுறுத்திய 5 பேய் படங்கள்.. அப்பமே 2 படங்களில் பட்டைய கிளப்பிய தக்காளி சீனிவாசன்

Trending News