என்னதான்பெரிய நடிகை போல் பிஎம்டபிள்யூ காரெல்லாம் வாங்கினாலும் இன்னமும் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை என்பதை உணர்ந்து தினமும் இரவில் கண்ணீர் வடிக்கிறாராம் அந்த நடிகை.
சினிமாவில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக சில பெயர் தெரியாத படங்களில் நடித்தவர் தான் அந்த நடிகை. அந்த படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. அதேபோல் சமூக கருத்துக்களுடன் வெளியான ஒரு படத்தில் இவருக்கு பெயர் கிடைக்கவில்லை.
இப்படி இருக்கையில்தான் ஒரு டிவியில் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி அந்த டிவியில் நடத்தப்பட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்றார். அதன் மூலம் பெரிய பெரிய முதலாளி ஷோ வாய்ப்பு கிடைத்தது.
அங்கு சென்றவருக்கு கெட்ட பெயரே மிஞ்சியது. இருந்தாலும் அந்த வீட்டிற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் அந்த நடிகை. படம் வெளியான பிறகுதான் அம்மணியின் தலையெழுத்து சினிமாவில் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரியுமாம்.
ஆனால் அந்த நடிகைக்கோ இனிமேலும் சினிமாவில் பெரிய அளவு முன்னேற முடியுமா? என்ற சந்தேகம் பெரிய அளவில் இருக்கிறதாம். அதற்குக் காரணம் தற்போது இளவயது நடிகைகள் பலரும் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் படங்களை கைப்பற்ற ஆரம்பித்துவிட்டனர்.
அதனால் 31 வயதிலும் தன்னால் முடிந்த அளவுக்கு காட்ட வேண்டியதை காட்டி பல போட்டோ ஷூட் நடத்தினாலும் பலனில்லை. மேலும் தன்னுடைய முன்னணி நாயகி கனவை மூட்டைகட்டி விடலாமா? என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.