புதன்கிழமை, ஜனவரி 15, 2025

18 வருடங்களில் 32 கதைகள், 32 இயக்குனர்கள்.. ஹீரோவின் இந்த முயற்சிக்கு கை கொடுக்காத சினிமா

சினிமாவை பொருத்தவரை ஒரு ஹீரோ ஒரே இயக்குனருடன் பல படங்களில் பணிபுரிவது வழக்கமான ஒன்று தான். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல நடிகர்கள் ஒரே இயக்குனர் படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து நடித்துள்ளனர். உதாரணமாக அஜித் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்தடுத்து நான்கு படங்களிலும், விஜய் அட்லி இயக்கத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களிலும் நடித்துள்ளனர்.

ஆனால் நடிகர் ஜீவா முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறார். அந்த வகையில் ஆசை ஆசையாய் படம் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் ஜீவாவிற்கு ராம் படம் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த ஜீவா தற்போது திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 18 ஆண்டுகளில் ஜீவா இதுவரை 32 படங்களில் நடித்துள்ளார். அந்த 32 படங்களையும் 32 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். ஜீவாவின் திரை வாழ்க்கையில் ஒரு இயக்குனர் இயக்கத்தில் ஒரு முறை தான் நடித்துள்ளார்.

இதுவரை எந்தவொரு இயக்குனருடனும் அவர் இரண்டாவது முறை கூட்டணி அமைத்ததே இல்லை. அதிலும் இவர் தேர்வு செய்த அத்தனை படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்கள். கதைக்களைமும் வேறு வேறு களங்கள் என அனைத்துமே புதிதாக உள்ளன. அதிலும் முக்கியமான இயக்குனர்கள் என்று பார்த்தால் அமீர்,  ஷங்கர், SP ஜெகநாதன், அமீர்கான், கதிர், செல்வம், ராஜேஷ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஜீவா இறுதியாக கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றதை மையப்படுத்தி பாலிவுட்டில் உருவான 83 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஜீவாவின் நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றது. தற்போது அவரது தந்தை தயாரிப்பில் வரலாறு முக்கியம் என்ற புதிய படத்தில் ஜீவா நடித்துள்ளார். இப்படி இவர் தேர்வு செய்யும் கதைகளும் சரி, இயக்குனர்களும் சரி அனைத்துமே புதிதுத தான்.

மற்ற ஹீரோக்களில் இருந்து மாறுபட்டு யோசிக்கும் ஜீவா சற்று வித்தியாசமாகவே காணப்படுகிறார். இவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்தும் செகண்ட் ஹீரோ சப்ஜெக்டாக இருப்பதாலும், துணிந்து எடுக்கும் முயற்சியாக இருந்தாலும் சினிமா கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

Trending News