செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.. 33 வயதாகும் அனிருத்தின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு

Aniruth’s Net Worth: இப்போது எங்கு திரும்பினாலும் அனிருத்தின் பாடல்களை தான் கேட்க முடிகிறது. அந்த அளவுக்கு நம்பர் ஒன் இசையமைப்பாளராக அவர் கெத்து காட்டி வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர், ஜவான் ஆகிய படங்களின் பாடல்கள் சோசியல் மீடியாவையே கிடுகிடுக்க வைத்தது. இதை அடுத்து வெளிவர இருக்கும் லியோவும் அடுத்த கட்ட சாதனைக்கு தயாராகி வருகிறது.

அந்த வகையில் முதல் பாடலிலேயே உலக அளவில் கவனம் பெற்ற இவர் இன்று தன்னுடைய 33வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு ஏற்ப இந்த வயதிலேயே அவர் இவ்வளவு சம்பாதித்து இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

இருந்தாலும் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளமாக வாங்கும் இவருக்கு இதெல்லாம் சாதாரணம் தான். அந்த வகையில் அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு ஐம்பதிலிருந்து 60 கோடியாக இருக்கிறது. மேலும் முதன்முதலாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை வாங்கிய இவர் தற்போது ரக ரகமான கார்களை வைத்திருக்கிறார்.

அதன்படி ஜாகுவார், ரேஞ்ச் ரோவர், ford mustang GT என பல கோடி மதிப்புள்ள கார்களும் இவரிடம் உள்ளது. அது மட்டுமின்றி சோசியல் மீடியாவில் அதிக ஃபாலோவர்ஸை வைத்துள்ள இவர் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அதன் மூலம் இவருக்கு லட்ச கணக்கில் பணம் கொட்டுகிறது.

மேலும் இப்போது கோலிவுட்டின் ஆணிவேரே அனிருத் தான் என்பது போல் அடுத்தடுத்த படங்களிலும் இவர் கமிட்டாகி வருகிறார். அதன்படி இந்தியன் 2, விடாமுயற்சி தலைவர் 170 தலைவர் 171, கவின் 4 உள்ளிட்ட பல படங்கள் இவர் கைவசம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிம்புவின் 48 ஆவது படத்திற்கும் இவரை அணுகி இருக்கின்றனர்.

ஆனால் நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு இவர் பிஸியாக இருப்பதால் அந்த வாய்ப்பை இவரால் ஏற்க முடியாமல் போயிருக்கிறது. மேலும் ஜவான் மூலம் இவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்புகள் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஆஸ்கர் நாயகனையே ஓவர்டேக் செய்து கெத்து காட்டி வரும் அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Trending News