நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அந்த 38 வயதான நடிகை ஒருவர் திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு மூத்த நடிகைகள் தான் இன்னமும் நடித்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் இந்த சின்ன நம்பர் நடிகை. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக அறிமுகமாகி பின்னர் கிளாமரில் பொளந்து கட்டிய இந்த நாயகி மொத்த தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார்.
ஆனால் ஆடுகிற கால் என்றாவது ஒருநாள் ஓய்ந்து தானே ஆக வேண்டும் என்பதற்கு ஏற்ப ஒரு கட்டத்தில் சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் தடுமாறினார். காணாமல் போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அந்த நடிகைக்கு கை கொடுத்தது காதல் திரைப்படம்.
அதன் பிறகும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு எதுவும் இல்லை. இதன் காரணமாக சோலோ ஹீரோயின் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்போதும் ரசிகர்கள் இவரை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை.
இதை கவனித்த அந்த நடிகையின் குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ள நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளனர். ஆனால் அந்த நடிகையோ, திருமணம் என்ற ஒன்று நடந்தால் அது காதல் திருமணம்தான் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறாராம்.
ஏற்கனவே சில பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி சின்னாபின்னமான அந்த நடிகைக்கு இன்னமும் காதல் ஆசை தீரவில்லையா என குடும்பத்தினரே கிண்டல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டாராம்.