புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அசினுக்கு 38 வயசு ஆயிடுச்சா.! புளியங்கொம்பாக பிடித்து செட்டிலானவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Asin Networth: திருமணம், குழந்தை குட்டி என்று செட்டிலான அசின் இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இத்தனை வயசு ஆயிடுச்சா என்பதே பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் நிலையில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு தகவலும் தலைசுற்ற வைத்திருக்கிறது.

அந்த வகையில் தமிழில், தெலுங்கு மலையாளம் என பிசியாக நடித்து வந்த இவர் திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன் பிறகு கணவரின் தொழிலை கவனித்து வந்த இவர் மொத்தமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

ஆனாலும் அசின் பற்றிய செய்திகள் ஏதாவது ஒன்று வெளியில் வந்து பரபரப்பை கிளப்பி விடும். அப்படித்தான் சமீபத்தில் இவர் தன் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என வெளிவந்த செய்தி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக வந்த செய்தியை பார்த்த அசின் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

அதன் பிறகு இந்த செய்தி வதந்தி என அவர் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி புளியங்கொம்பாக பிடித்து செட்டிலான அவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டுமே 117 கோடியாக இருக்கிறது. இவை அனைத்தையும் அசின் தன்னுடைய உழைப்பாலும், நடிப்பாலும் மட்டுமே சம்பாதித்ததாகும். அதன்படி இவரிடம் பென்ஸ், ஆடி உள்ளிட்ட பலவகையான கார்கள் இருக்கிறது.

அதேபோன்று இவருடைய சொந்த ஊரான கேரளாவிலும் இவருக்கு பண்ணை வீடு, ஆடம்பர பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறதாம். இப்படி இளம் வயதிலேயே கோடீஸ்வரியாக இருக்கும் இவரிடமே இவ்வளவு பணம் இருக்கிறது என்றால் அவரின் கணவர் சொத்து மதிப்பை பற்றி கேட்கவா வேண்டும்.

அதையும் சேர்த்து கணக்கிட்டால் பல கோடிகளை தாண்டி விடும். இப்படியாக 38 வயதிலேயே சொந்தமாக 100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இவர் இப்போது நிற்க கூட நேரம் இல்லாமல் கணவரின் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறாராம். அந்த வகையில் அனைத்திலும் வெற்றியை ருசித்து வரும் அசினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Trending News