புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தயாரிப்பாளர்களை பார்த்தாலே அசடு வழியும் 39 வயது நடிகை.. கணவருக்காக இது கூட இல்லனா எப்படி என்கிறாராம்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஒருவர் சமீபகாலமாக தன்னுடைய கணவருக்கு வாய்ப்பு தேடுவதற்காக பார்க்கும் தயாரிப்பாளர்களிடம் அசடு வழியும் சம்பவம் நடைபெற்று வருகிறதாம்.

ஒரு காலத்தில் தன்னுடைய சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் தான் அந்த நாயகி. பார்த்தாலே ஹோம்லி லுக்கில் இருக்கும் இந்த நடிகையை ரசிக்காத ரசிகர்களே கிடையாது. அவ்வளவு ஏன் பல நடிகர்களுக்கும் இந்த நடிகை மீது ஒரு கண்ணாகவே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் உடன் நடித்த சக நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை அளவுக்கு அந்த நடிகருக்கு சினிமாவில் பெரிய வரவேற்பு இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்களில் நடித்து வந்தார்.

சமீபகாலமாக மொத்தமாக பட வாய்ப்புகள் இல்லாததால் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அப்படி அவர் வில்லனாக நடித்த ஒரு படம் சமீபத்தில் வெளியாகி தோல்வியை தழுவியது. கேரக்டர் ஸ்டைலிஷாக இருந்தாலும் படம் பெருசாக செல்லவில்லையாம்.

சில வருடங்களாக குழந்தை குட்டி என செட்டிலான அந்த நடிகை தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். குணச்சித்திர வேடங்களிலும் முன்னாள் நடிகர்களுக்கு மனைவி வேடத்திலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் மட்டும் அல்லாமல் விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் அந்த நடிகை சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கு செல்லும் போது அங்கு வரும் தயாரிப்பாளர்களிடம் அசடு வழிந்து தன்னுடைய கணவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கும் சம்பவம் அதிகமாக அரங்கேறி வருகிறதாம். 39 வயதில் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறதே பெருசு, இதில் உங்கள் கணவருக்கு வேறயா என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அப்புறம் பார்க்கலாம் என ஒதுங்கி விடுகிறார்களாம்.

Trending News