வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

39 வயது நடிகையை தேடி சென்ற கமல்.. காரணம் கேட்டு அதிர்ச்சியான படக்குழு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதை அடுத்து கமலுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்த பிரபல நடிகை இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் பாகம் இரண்டினை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனிடையே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சனைகள் காரணமாக சில வருடங்களாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

இதனிடையே நடிகை காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்றெடுத்த பின் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனிடையே காஜல் அகர்வாலின் கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகை திரிஷா இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால் நடிகை திரிஷா இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக உடனே ஒப்புக் கொள்ளவில்லையாம். ஏனென்றால் 2010ஆம் ஆண்டு கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்த மன்மதன் அம்பு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். அதே போல 2015 ஆம் ஆண்டு தூங்காவனம் திரைப்படத்திலும் கமலுடன் சேர்ந்து திரிஷா நடித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் சரியாக ஓடாத காரணத்தினால் திரிஷா மீண்டும் கமலுடன் நடிக்க வேண்டுமா என்று யோசித்தாராம்.

ஆனால் கமல்ஹாசன் திரிஷாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். அதற்குப்பின் திரிஷா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரிஷாவிற்கு முன்பு நடிகை சமந்தாவை இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று கமலஹாசன் யோசித்தாராம்.

அதற்கு சமந்தா கால்ஷீட் இல்லை என்று சமாளித்து இப்படத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். மேலும் கமலஹாசனுடன் நடித்தால் சமந்தா பல சர்ச்சைகளில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தில் அவர் இப்படத்தில் நடிக்காமல் போனதற்கு முக்கியமான காரணமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே த நடிகை த்ரிஷா இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Trending News