செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெங்கட் பிரபுவுக்கு ஐஸ் வைத்த கீர்த்தி நடிகைகள்.. தளபதி ஓகே சொன்ன 3வது ஹீரோயின்

கடந்த பல மாதங்களாகவே லியோ திரைப்படம் தான் சோசியல் மீடியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டாக இருந்து வந்தது. தற்போது அதை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு தளபதி 68 விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. அதிலும் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க இருப்பது பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது விஜய், வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் கூட்டணியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதைத்தொடர்ந்து இப்படத்தில் தளபதிக்கு ஹீரோயினாக எந்த நடிகை நடிப்பார் என்ற விவாதம் தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இப்படத்தில் நடிப்பதற்காக மூன்று நடிகைகள் பரிசீலனையில் இருந்தனர்.

Also read: மாநாடு பட வெற்றிக்கு வெங்கட் பிரபுவை விட இவர் தான் காரணமாம்.. தளபதி-68 தலை தப்புமா!

அதில் இரண்டு நடிகைகளுக்குள் கடும் போட்டியே நடந்திருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் தற்போது இளம் ஹீரோயின் ஒருவர் வென்று தளபதிக்கு ஜோடியாக மாறி இருக்கிறார். அந்த வகையில் சாய்பல்லவி, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி செட்டி ஆகிய மூன்று நடிகைகளில் ஒருவரை தான் விஜய்க்கு ஜோடியாக்கும் முயற்சியில் தயாரிப்பு தரப்பு இருந்திருக்கிறது.

ஆனால் சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் படத்தில் கமிட்டாகி இருப்பதால் இந்த போட்டியில் இருந்து அவர் விலகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் கீர்த்தி செட்டி இருவரும் வெங்கட் பிரபுவின் சாய்ஸ் ஆக இருந்திருக்கின்றனர். அதில் கீர்த்தி சுரேஷ் தான் எப்படியாவது விஜய்யுடன் நடித்து விட வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டி வந்திருக்கிறார்.

Also read: தோல்வி இல்லாமல் அஜித், விஜய்யை இயக்கிய ஏழு இயக்குனர்கள்.. 8-வதாக வந்து சேர்ந்த வெங்கட் பிரபு

இது தேவையில்லாத பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தால் விஜய் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து அவரே மூன்றாவது ஹீரோயினான கீர்த்தி செட்டியை ஓகே செய்திருக்கிறார். இவர் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த நட்பின் அடிப்படையில் தளபதி 68-ல் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று அவர் இயக்குனரிடம் ஒரு பிட்டையும் போட்டு வைத்திருந்தாராம். அதேசமயம் கீர்த்தி சுரேஷும் வெங்கட் பிரபுவுக்கு ஐஸ் வைத்திருக்கிறார். இவ்வாறு இந்த கீர்த்தி நடிகைகளின் போட்டியில் 19 வயது அழகு புயல் தான் வென்றிருக்கிறார். இதுதான் இப்போது மற்ற நடிகைகளின் வயிற்றில் புகையை கிளப்பி இருக்கிறது.

Also read: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆனது பிரசாந்துக்கு எடுபடல.. சொந்தக்காசிலே சூனியம் வச்சுக்கிட்ட கொடுமை

Trending News