புதன்கிழமை, ஜனவரி 15, 2025

4 அக்கடதேச நடிகர்களும் முருகதாஸுக்கு கொடுத்த டிமிக்கி.. எஸ்கே படத்துக்கு வந்த முரட்டு நாயர்

சிவகார்த்திகேயன் அமரன் படத்தை முடித்துவிட்டு ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் அமரன் படம். அந்த படத்திற்கு மிக தத்ரூபமான கதாபாத்திரம் என்பதால் அதிலிருந்து இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாகதான் மீண்டு வருகிறாராம் எஸ் கே.

அமரன் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் மீண்டு வருவதற்கு நிறைய சிரமங்கள் எடுத்துக் கொண்டாராம். இடையில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் கமல் இருவருக்கும் கூட நிறைய பிரச்சனை வந்துவிட்டது. சிவகார்த்திகேயன் இரண்டு படங்களிலும் மாட்டிக் கொண்டு முழித்து வந்தார். அப்போது அமரன் படம் 90% தான் முடிந்திருந்தது.

அமரன் படத்தை தயாரித்தது ராஜ்கமல் ஃபிலிம்ஸ். ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அமரன் பட பேட்ச் ஒர்க் பண்ணுவதில் கூட நிறைய சிக்கல் ஏற்பட்டது. இரண்டு படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். அதனால் கெட்டப்பில் இருந்து எல்லாமே மாறுவதால் மிகுந்த சிரமத்தை அனுபவித்தார்.

எஸ்கே படத்துக்கு வந்த முரட்டு நாயர்

முருகதாஸ் இந்த படத்தை பான் இந்தியா படமாக எடுக்கிறார். அதற்காக அக்கடதேச நடிகர்கள் நான்கு பேரை நாடி உள்ளார் ஆனால் அவர்கள் நாலு பேரும் இவருக்கு கல்தா கொடுத்துவிட்டனர். இதனால் கடைசியாக மாஸ் முரட்டு நடிகரை தேர்ந்தெடுத்துள்ளார். அவரும் இந்த படத்திற்கு 20 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார்.

ஐயப்பனும் கோஷியும் புகழ் பிஜுமேனன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அந்தப் படத்தில் ஐயப்பன் நாயராக அனைவரையும் கவர்ந்தவர். முண்டூர் மாடன் என முரட்டுத்தனமாக நடித்திருப்பார். இவர்தான் இப்பொழுது சிவகார்த்திகேயன், முருகதாஸ் படத்தில் நடிக்கிறார்

Trending News