ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அரசியல் ஆசையால் சினிமாவில் பேரை தொலைத்த 4 நடிகர்கள்.. ரீ என்ட்ரி கொடுக்கும் சரத்குமார்

தன் நடிப்பால் தமிழ் சினிமாவில் பிரபலங்களாக மாறி மக்களின் அன்பை பெற்றதில்லாமல், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் நடிகர்கள். அவ்வாறு முயற்சி எடுக்கும் கலைஞர்களில் ஒரு சிலர் மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.

மேலும் சினிமாவில் கிடைத்த வாய்ப்பையும் தவற விட்டு அரசியலில் சாதிக்க போவதாக எண்ணி, தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றனர். அவ்வாறு அரசியலில் இறங்கி தோல்வியை சந்தித்த 4 நடிகர்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் அர்ஜுன்.. லியோ படத்தில் மொத்தமாக மாறிய சம்பவம்

எம்ஜிஆர்: தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த மாபெரும் கலைஞன் எம்ஜிஆர். அந்த அளவுக்கு மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர். சினிமாவில் பல படங்கள் வெற்றிக்கு பிறகு தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். அதன்பின் நடித்த படங்களான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், நவரத்தினம் போன்ற படங்கள் பெரிதும் ஓடவில்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் இருந்த வெற்றி அதன்பின் கிடைக்காமல் தோல்வியை தழுவினார் எம்ஜிஆர்.

கேப்டன் விஜயகாந்த்: தமிழ் சினிமாவில் புரட்சிக் கலைஞராய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். பல கருத்துள்ள படங்களில் நடித்து வெற்றி கொடுத்தவர்.2010ல் இவர் இயக்கி நடித்த படம் தான் விருதகிரி. ஆனாலும் இப்படம் அவருக்கு போதிய வரவேற்பை பெற்று தரவில்லை. அதன்பின் தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்.அதை தொடர்ந்து இவர் எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: புகழ் போதையில் மகளுக்கே மாமா வேலை பார்த்தா அப்பா.. அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன சம்பவம்

சரத்குமார்: சினிமாவில் வில்லனாய் அறிமுகமாகி அதன்பின் கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தவர் சரத்குமார். 2007ல் இவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் நம் நாடு. இப்படத்திற்கு பிறகு அவர் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதை தொடர்ந்து வெளிவந்த படமான வைத்தீஸ்வரன் இவருக்கு போதிய வரவேற்பை பெற்று தரவில்லை. அதன் பின் தொடர் தோல்வியை சந்தித்த இவர் தற்போது வாரிசு மற்றும் பொன்னின் செல்வன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்.

விஷால்: செல்லமே என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின் இவர் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதை தொடர்ந்து 2017 ராதா கிருஷ்ணன் நகர் தொகுதியில் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். அவை நிராகரிக்கப்பட்டதால் மேலும் நடிப்பில் இறங்கிய இவருக்கு படு தோல்விதான் மிஞ்சியது. அதற்குப்பின் தற்பொழுது துப்பறிவாளன் 2 படத்தில் இவரின் நடிப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றர் ரசிகர்கள்.

Also Read: டம்மி பீஸ் இடம் சத்தியம் வாங்கிய குணசேகரன்.. ஜனனியை விட ரேணுகா பரவாயில்லை

Trending News