Cinema is different from politics: சினிமா தோன்றிய காலத்தில் இருந்து நடிக்க வந்த நடிகர்கள் கொஞ்சம் பிரபலமானதும் அவர்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைவதற்கு தேர்ந்தெடுப்பது அரசியல்தான். என்னதான் நடிகர்கள் பேரும், புகழையும் சம்பாதித்தாலும் பதவி ஆசை அவர்களை விடுவதாக இல்லை.
அதனாலேயே எம்ஜிஆர் முதல் தற்போது இருக்கும் விஜய் வரை உச்ச நட்சத்திரங்களாக ஆனதும் அரசியலை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு நல்ல நடிகராக இருந்தால் எப்படி நடிப்பின் நாயகனாக இருக்க வேண்டும் என்று சிவாஜி வழியை பின்பற்றி இருக்க வேண்டும்.
ஆனால் ஒருவரும் அப்படி யோசிப்பதே இல்லை. கொஞ்சம் நடிப்பின் உச்ச கட்டத்திற்கு போனதும் அரசியலில் குதித்து, அதிலும் கால் தடம் பதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நடிகர்களை தயவு செய்து நம்பி ஓட்டு போட வேண்டாம் என்று நிறைய பேர் சொல்லி இருந்தாலும் சினிமாவில் முக்கிய பிரபலமான நான்கு நடிகர்களும் கூறி இருக்கிறார்கள்.
அன்றே கணித்த எம் ஆர் ராதா
அதாவது நடிகர்கள் மக்களின் கலைஞர்கள் தவிர அவர்களை கொண்டாடக்கூடாது என்று மறைந்த பழம்பெரும்
நடிகர் எம்ஆர் ராதா கூறியிருக்கிறார். படத்தில் நடிகர்களை பார்த்தால் ரசித்து விட்டு செல்லுங்கள் அவர்கள் காசுக்காக நடிப்பவர்கள் தான்.
அதே மாதிரி நடிகர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் மக்களாகிய நீங்கள் தான். உண்மையிலேயே அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அரசியலுக்கு வந்து தான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
தொடர்ந்து அவர்கள் நல்லதே செய்து வந்தால் மக்கள் கொடுக்க வேண்டிய மரியாதையை தானாகவே கொடுத்து விடுவார்கள். அதை தவிர்த்து நடிகர்களை நம்பி தயவு செய்து ஓட்டு போடும் உரிமையை மட்டும் விற்று விடாதீர்கள் என்று அப்பொழுதே எம்ஆர் ராதா ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
இவரை தொடர்ந்து சினிமா வேற அரசியல் வேற என சில கோட்பாடுகளுடன் சிவக்குமார், பிரகாஷ் ராஜ், கவுண்டமணி மற்றும் அஜித் ஆகியவர்களும் பின்பற்றி வருகிறார்கள். அதாவது எங்களுடைய வேலை நடிப்பு மட்டும்தான். அதை சரிவர செய்ய விடுங்கள். அரசியல்வாதி வேற, நடிகர்கள் வேற என இரண்டுக்கும் ஒரு கோடு போட்டு அதன் மூலம் வாழ்ந்து வருகிறார்கள்.