திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மீனாவின் அழகில் மயங்கி கிடந்த 4 நடிகர்கள்.. காதல் எனக் கூறி திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட சம்பவம்

Actress Meena: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையான மீனா நடிக்க வந்து 40 வருடங்களை கடந்துவிட்டது. ஆனாலும் இவர் பலருக்கும் பிடித்த நடிகையாக தான் இருக்கிறார். சிறு வயதிலேயே நடிக்க வந்த இவர் கிடு கிடுவென பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அப்படிப்பட்ட இவருடைய அழகில் மயங்கி கிடந்த சில நடிகர்களும் இருக்கிறார்கள். அதில் ஒரு நடிகர் திருமணம் வரை சென்று விலகிய கதையும் உண்டு. அந்த வகையில் மீனா மலையாள நடிகர் மோகன்லாலை காதலித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அன்றைய காலகட்டத்தில் கிசுகிசுவாக கூட வந்திருக்கிறது.

Also read: பிரபுதேவா உடன் டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. என்னோட குரு என அந்தர் பல்டி அடித்த இந்துஜா

அதன் பிறகு கன்னட நடிகர் ரவிச்சந்திரன் மேல் இவர் காதலில் இருந்து இருக்கிறார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் போன்ற பல பரிமாணங்களை கொண்ட இவருடன் மீனா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் காரணமாகவும் இப்படி ஒரு செய்தி இருந்ததுண்டு.

அதேபோன்று பிரபல கன்னட நடிகரான சுதீப்புடன் மீனா ரகசிய திருமணம் என்று கூட செய்திகள் வெளிவந்தது. பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த செய்தியை மீனா மறுத்தது மட்டுமல்லாமல் இது முற்றிலும் வதந்தி என்று கூறினார். ஆனாலும் இவர்கள் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்திருப்பதால் இந்த செய்தி பெரும் பூகம்பத்தை கிளப்பியது.

Also read: இமேஜை பொருட்படுத்தாமல் மீனா செய்த காரியம்.. நடுரோட்டில் அரங்கேறிய சம்பவம்

இப்படி மீனா குறித்து பல செய்திகள் வெளிவந்திருந்தாலும் அவர் திருமணம் வரை செல்லலாம் என்று முடிவெடுத்தது பிரபுதேவா உடன் தான். இவர்கள் இருவரும் டபுள்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அப்போது இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர்.

இத்தனைக்கும் பிரபுதேவாவுக்கு அப்போது திருமணம் ஆகி இருந்தது. இருந்தாலும் இந்த ஜோடி கல்யாணத்தில் இணைய முடிவெடுத்தபோது மீனாவுக்கு நெருக்கமான தோழிகள் பிரபுதேவாவை நம்ப வேண்டாம் என்று கூறி இதை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். அதன் பிறகு காதல் கத்திரிக்காய் எல்லாம் ஓரம் கட்டிய மீனா நடிப்பில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also read: விஜய்க்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 ஹீரோயின்கள்.. நடிகையாக நடிக்க முடியாத ஆதங்கத்தை தீர்த்த மீனா

Trending News