ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யிடம் காரை பரிசாக வாங்கிய 4 பிரபலங்கள்.. ஓடாத படத்திற்கு இவ்வளவு பில்டப் தேவையா தளபதி

Actor Vijay: பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய் தற்போது 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கக்கூடிய நடிகராக வளர்ந்து நிற்கிறார். இவருடைய படத்தில் இணைந்து பணியாற்றிய 4 பிரபலங்களுக்கு அன்பு பரிசாக காரை கொடுத்திருக்கிறார். அதிலும் ஓடாத படத்திற்கு 30 லட்சம் மதிப்புள்ள காரை கொடுத்ததெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

இயக்குனர் தரணி: விஜய் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் கில்லி. இந்தப் படம் விஜய்யின் கேரியருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம். இந்தப் படத்தின் இயக்குனர் தரணிக்கு விஜய் ஒரு சான்ட்ரோ காரை பரிசாக கொடுத்திருக்கிறார்.

Also Read: சூப்பர் ஹீரோ கதையை நம்பி மோசம் போன 5 ஹீரோக்கள்.. விஜய் விக்ரமுக்கும் இதே நிலைமைதான்

இயக்குனர் பேரரசு: ஊர்களின் பெயர்களை வைத்து படங்களை எடுப்பதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இயக்குனர் தான் பேரரசு. இவர் விஜய்யை வைத்து எடுத்த திருப்பாச்சி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா ஒரு கமர்ஷியல் திரைப்படம். இந்த படத்தின் வெற்றிக்காகவே படத்தின் இயக்குனர் பேரரசுக்கு தளபதி விஜய் ஒரு மாருதி ஷிப்ட் காரை பரிசாக கொடுத்தார்.

சமந்தா: விஜய் மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக நடித்த திரைப்படம் தான் கத்தி. இந்தப் படத்தின் மூலம் சமந்தாவுடன் நல்ல நட்பில் இருந்த விஜய், தன்னுடைய நினைவு பரிசாக அவருக்கு 30 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்திருக்கிறார். ஆனால் மற்ற பிரபலங்களுக்கு விஜய் காரை பரிசாக அளித்த போது ஏகப்பட்ட புகைப்படங்கள் வெளியானது.

ஆனால் சமந்தாவிற்கு கொடுக்கப்பட்ட கார் குறித்த எந்த புகைப்படம் லீக் ஆகவில்லை. மேலும் கத்தி திரைப்படம், விஜய்யின் மற்ற படங்களை காட்டிலும் பெரிதாக ஓடவில்லை. அப்படி இருக்கும் போது அதன் கதாநாயகியாக நடித்த சமந்தாவிற்கு 30 லட்ச கார் என்பது கொஞ்சம் ஓவர் தான் என்று தளபதி ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Also Read: 350 பெண்களுடன் தொடர்பில் இருந்த விஜய் பட வில்லன்.. பரபரப்பை கிளப்பிய பயில்வான்

அனிருத்: அதே கத்தி படத்திற்காகவே அந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முக்கியமான பரிசை விஜய் அளித்திருக்கிறார். இந்த முறை கார் அல்ல. இவர் அனிருத்திற்கு கொடுத்த கிப்டடே வேற, அது பியானோ.

இவ்வாறு இந்த 4 பிரபலங்கள்தான் விஜய்யிடம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளிட்ட பரிசு பொருள்களை பெற்றிருக்கின்றனர். அதிலும் மொக்க படத்திற்காக 30 லட்சம் காரை சமந்தாவிற்கு கொடுத்ததெல்லாம் கொஞ்சம் ஓவர் பில்டப்பு தான்.

Also Read: லியோ டைட்டிலால் விஜய்க்கு வந்த புது தலைவலி.. ஃப்ரீயா உருட்டுர விளம்பரமா இருக்கே!

Trending News