Vadivelu: செஞ்ச பாவங்கள் எல்லாம் ஒரு நாள் நம்மளை துரத்தும் என்று சும்மாவா சொன்னாங்க. எல்லாரும் அனுபவித்த ரண வேதனை தான் சொலவடையாக சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வடிவேலு என்றால் இப்ப இருக்கிற சின்ன குழந்தைகள் முதல் வடிவேலு காமெடி வையுங்கள். நாங்கள் ஜாலியாக பார்த்து வயிறு குலுங்க சிரிக்க போறோம் என்று சொல்லும் அளவிற்கு குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
அந்த அளவுக்கு காமெடியில் இவருக்கு ஈடாக யாரும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப உடல் தோற்றத்தையும், முகபாவனையும் வைத்து சிரிக்க வைக்க கூடியவர். அப்படிப்பட்ட இவரைப் பற்றி ஒருத்தர் கூட நல்லவிதமாக கேரக்டரை சொல்லியது கிடையாது. அதிலும் இவருடன் நடித்த சின்ன சின்ன ஆர்டிஸ்ட்டுகள் ஏதாவது ஒரு விதத்தில் இவரால் பாதிக்கப்பட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.
வடிவேலு மனசை கரைத்த நடிகர்
அப்பேர்ப்பட்ட கல்நெஞ்சக்காரராகவும், மற்றவர்கள் முன்னேறக்கூடாது என்று நினைக்கக்கூடிய ஒரு கெட்ட புத்தியும் உள்ளவர் என்று பலரும் பலபேட்டிகளில் இவரைப் பற்றி கொந்தளித்து பேசி இருக்கிறார்கள். அது மட்டுமா இவரை வளர்த்து விட்ட விஜயகாந்த், ராஜ்கிரணையும் வச்சு செய்யும் அளவிற்கு அவர்களையும் சீண்டிப் பார்த்திருக்கிறார்.
அப்படிப்பட்டவர் தற்போது பேரும் புகழையும் வளர்த்துக் கொண்டு இருந்தாலும் இவருடன் நடித்த சின்ன சின்ன ஆர்டிஸ்ட்டுகள் இக்கட்டான சூழலில் இருந்த பொழுது அவர்களை கண்டு கொள்ளாமல் கதற விட்டிருக்கிறார். அதில் போண்டா மணி, அல்வா வாசு போன்ற நடிகர்கள் உடல்நல பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் பண்ணாமல் தவிக்க விட்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட இவர் செஞ்ச பாவங்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும், தற்போது இவருடன் நடித்த வெங்கல் ராவுக்கு முதல்முறையாக ஒரு உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். அதாவது வெங்கல் ராவு, வடிவேல் உடன் முக்கால்வாசி படங்களில் நடித்திருக்கிறார். தலையில் கை வைத்தால் கடித்து விடுவேன் என்ற காமெடி மூலம் மிகவும் பரிச்சயமாயிருக்கிறார்.
அப்படிப்பட்டவர் தற்போது கை கால் செயலிழந்து மருத்துவமனை உதவிக்காக பணம் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்ததும் இவருக்கு உதவும் வகையில் முதன் முதலில் சிம்பு 2 லட்ச ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார். இவரைத் தொடர்ந்து விஜய் டிவி மூலம் பிரபலமான KPY பாலா ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறார்.
அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில் வடிவேலு உடைய பெயர் ஏற்கனவே டேமேஜ் ஆகி இருப்பதால் இதன் மூலம் ஏதாவது செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார். அதனால் வடிவேலு அவரால் முடிந்தவரை ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்திருக்கிறார். தற்போது இவர் உதவி செய்துதான் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.
சர்ச்சையில் சிக்கிய வடிவேலு
- வடிவேலுவால் கேரியரை இழந்த பிரபலம்
- Vadivelu : இனி சினிமால ஆணி புடுங்க முடியாதுன்னு சன் டிவிக்கு வந்த வடிவேலு
- வடிவேலு செய்யாத உதவியை செய்து காட்டிய சிம்பு