வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தை தூக்கி விட்டு அழகு பார்த்த 4 பிரபலங்கள்.. இவங்க இல்லனா AK எப்பவோ காணாம போயிருப்பார்

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கிறார். இவருடைய அடுத்தடுத்த படங்களை எடுப்பதற்கு டாப் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த அளவுக்கு அஜித் வளர்வதற்கு காரணமாக 4 முக்கிய பிரபலங்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். இவர்கள் இல்லை என்றால் ஏகே எப்பவோ காணாமல் போய் இருப்பார்.

இயக்குனர் சரண்: அஜித்துக்கு என்று இவர் நிறைய படங்கள் செய்து அவரை வளர்த்து விட்டவர். இவர் முதல் முதலாக 1998 ஆம் ஆண்டு அஜித்தின் காதல் மன்னன் என்கின்ற சூப்பர் ஹிட் படத்தை எழுதி இயக்கியவர். இந்த படத்தின் மூலம் தான் சரணும் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனால் அஜித் அவருக்கு கிடைத்த ஒரு லக்கியாகவே தெரிந்ததால், தொடர்ந்து அவரை வைத்து அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கி அஜித்தையும் வளர்த்து விட்டார்.

Also Read: வில்லனுக்கு உண்டான மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 படங்கள்.. அஜித்துடன் மோதி மொக்கை வாங்கிய விவேக் ஓபராய்

ரகுவரன்: 80களில் தமிழில் அறிமுகமான முக்கிய நடிகர்களில் ஒருவர் ரகுவரன். சுமார் 400 படங்களில் வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு வேடங்களில் மிரட்டினார். இவர் அஜித்துடன் அமர்க்களம், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆஞ்சநேயா, திருமலை போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

இவர்கள் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்கு இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. சொல்லப்போனால் அஜித்துக்கு இவர் ஒரு கார்டியன் போன்றவர். நிறைய விஷயங்கள் இவர்கள் இரண்டு பேரும் ஷேர் செய்வார்கள்.

Also Read: பிரகாஷ் ராஜின் ஒட்டுமொத்த சொத்து விவரம்.. ஒரு படத்திற்கு மட்டும் இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா!

பிரகாஷ்ராஜ்: ஆரம்பத்தில் இருந்தே இவரிடம் அஜித், சார் நான் நல்ல நடிக்கிறேனா எனக்கு நடிப்பு வருதா என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம். பிரகாஷ்ராஜ் அவருக்கு நிறைய டிப்ஸ் வழங்குவாராம்.

எஸ்ஜே சூர்யா: அஜித்தை ஒரு வில்லனாக உருவாக்கியவர் இவர்தான். அதுவரை காதல் மன்னனாகவே ரசிகர்களுக்கு தெரிந்த அஜித்தை 1995 ஆம் ஆண்டுவெளியான ஆசை படத்தில் அவருக்குள் இருக்கும் வில்லத்தனத்தை வெளியில் கொண்டு வந்த பெருமைக்குரியவர் இயக்குனர் எஸ்ஜே சூர்யா. இந்த படம் அஜித்தின் கேரியருக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

Also Read: விஜய் த்ரிஷா இணைந்து நடித்த 5 படங்கள்.. 20 வருடங்களாக தொடரும் கெமிஸ்ட்ரி

ஆகையால் இந்த 4 பிரபலங்கள் தான், சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் தற்போது டாப் நடிகராக இருக்கும் அஜித்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர். இவர்கள் இல்லை என்றால் ஏகே எப்போதோ காணாமல் போய் இருப்பார். ஆனால் அப்படியெல்லாம் நடக்காமல் இவர்கள் நான்கு பேரும் தான் அஜித்தை உச்சத்திற்கு ஏற்றி வைத்து அழகு பார்த்துள்ளனர்.

Trending News