சமீபத்தில் காணாமல் போன 4 காமெடி நடிகர்கள்.. மோசமான ரூட்டை பிடித்த பால சரவணன்

Bala-Saravanan
Bala-Saravanan

சமீபத்தில் காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோ அவதாரம் எடுத்து வருகிறார்கள. சதீஷ், பரோட்டா சூரி, சந்தானம் போன்ற எல்லோரும் ஹீரோவாக மாறிவிட்டனர். அதனால் இவர்களை காமெடி ரோல் செய்வதற்கு யாரும் அழைப்பதில்லை. அப்படி சிறிது காலமாக சினிமாவை விட்டு விலகிய 4 காமெடி நடிகர்கள்.

சதீஷ்: மெரினா, எதிர்நீச்சல் போன்று சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த படங்கள் தான் இவருக்கு சினிமாவில் ஒரு டர்னிங் பாயிண்ட். காமெடி ரோல்களில் கலக்கி வந்தாலும் சமீபத்தில் இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ், காஞ்சுரிங் கண்ணப்பன் என ஹீரோ அவதாரம் எடுத்தார். இப்பொழுது கைவசம் படங்கள் இல்லை.

மோசமான ரூட்டை பிடித்த பால சரவணன்

பால சரவணன்: குட்டி புலி, கரகர மகா தேவா என ஒரு காலத்தில் படங்களில் பிசியாக நடித்தவர் பால சரவணன். இவரையும் இப்பொழுது தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. விலங்கு வெப் தொடரில் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பேசி இவர் தன் பெயரை எடுத்துக் கொண்டார்.

கருணாகரன்: கலகலப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர், வெகுளியான காமெடி நடிப்பிற்கு பெயர் போனவர். இவர் கடைசியாக நடித்த படம் அயலான். இவரை இப்பொழுது தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை,

காளி வெங்கட்: கார்கி படம் மூலம் கௌரவமான தோற்றங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் காளி வெங்கட். பழைய மாதிரி தமிழ் சினிமாவில் இவர் நடிக்காவிட்டாலும் ஒன்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த படம் குரங்கு பெடல்.

Advertisement Amazon Prime Banner