வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருக்கும் 4 போட்டியாளர்கள்.. டபுள் போனஸ் ஆக வெளியேறப் போகும் டம்மி பீஸ்கள்

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது 21 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரம் ஓபன் நாமினேஷன் மூலம் 11 போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். இதில் எப்பொழுது ஆனந்தி மற்றும் சுனிதா நாமினேஷனுக்கு வருவார்கள் என்று மக்கள் தொடர்ந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் இந்த வாரம் சுனிதா மற்றும் ஆனந்தி நாமினேஷனுக்கு வந்து விட்டார்கள்.

ஆனால் வழக்கம் போல முத்துக்குமார் மற்றும் ஜாக்லின் தொடர்ந்து நாமினேட் ஆகிகொண்டே இருக்கிறார்கள். இருந்தாலும் மக்களின் சப்போர்ட் இவர்கள் இருவருக்கும் அதிகமாக இருப்பதால் இவர்களை அசைக்க முடியாது என்பதற்கு ஏற்ப உள்ள ஜம்பமாக ஆட்டத்தை விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் ஆண்கள் அணியில் முத்துக்குமாரும் பெண்கள் அணியில் ஜாக்லினும் தற்போது வரை மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

ஆனால் இப்பொழுது வைல்ட் கார்டு மூலம் போன ஆறு போட்டியாளர்களின் விளையாட்டு பொறுத்து எப்படி வேண்டுமானாலும் ஓட்டுகள் மாற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் போன ஒரு நாளிலேயே ஸ்கோர் பண்ணும் அளவிற்கு ராயன் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை வச்சு செய்து வருகிறார். அதே மாதிரி பெண்கள் அணியில் மஞ்சரி மனசில் பட்டதை பளிச்சென்று பேசும் விதமாக பேசி வருகிறார்.

அந்த வகையில் இனி ஆட்டம் வேற லெவலில் சூடு பிடிக்க போகிறது என்பதற்கு ஏற்ப பிக் பாஸில் பல திருப்பங்கள் ஏற்பட போகிறது. மேலும் இந்த வாரம் 11 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி இருந்தாலும் அவர்களில் முத்துக்குமார் மற்றும் ஜாக்லினுக்கு வழக்கம் போல் மக்கள் ஆதரவு கொடுப்பதால் அதிக ஓட்டுகளை வாங்கிவிடுவார்கள். அடுத்ததாக நடுநிலையாக இருப்பது பவித்ரா, தீபக், விஷால், ரஞ்சித், அருண் இவர்களுக்கும் ஓரளவுக்கு வாக்கு கிடைத்துவிடும்.

இவர்களுக்கு அடுத்தபடியாக டேஞ்சர் ஜோனில் இருக்கும் 4 போட்டியாளர்கள் யார் என்றால் சாச்சனா, அன்சிதா, ஆனந்தி மற்றும் சுனிதா. ஆனால் உள்ள சும்மா இருந்து வேடிக்கை பார்க்கும் சாச்சனா தான் இந்த வாரம் பலியாடாக சிக்க போகிறார். இவரை தொடர்ந்து டபுள் போனஸ் ஆக கூடவே அன்சிதாவும் வெளியே போக வாய்ப்பு இருக்கிறது.

இவர்களுக்கு இடையில் ஆனந்தி மற்றும் சுனிதாக்கு கம்மியான ஓட்டுகள் கிடைத்தாலும் விஜய் டிவி சேனலை பொறுத்தவரை இவர்களை இப்போதைக்கு வெளியே அனுப்ப மாட்டார்கள். அதனால் தற்போது டம்மி பீஸ்களாக இருக்கும் சாச்சனா மற்றும் அன்சிதா தான் இந்த வாரம் வெளியே போகப் போகிறார்கள்.

Trending News