ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸ் வீட்டில் காதலில் சிக்கிய 4 ஜோடிகள்.. தனி ட்ராக்கில் புகுந்து விளையாடும் பவித்ரா, சமத்தா இருக்கும் அன்சிதா

Vijay Tv Bigg Boss Tamil 8: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு வீட்டிற்கு நடுவில் கோடு போட்டது போல், பிக் பாஸ் குருநாதர் இந்த முறை வீட்டிற்கு நடுவில் கோடு போட்டு அந்தப் பக்கம் பெண்கள் இந்தப் பக்கம் ஆண்கள் அணி என இருவேறாக பிரித்து விட்டார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட 40 நாட்களாக ஆண்கள் அணி ராஜ்ஜியம் பண்ணிக் கொண்டிருந்த கோட்டை தற்போது பெண்களிடம் போய்விட்டது.

அந்த வகையில் ஆண்கள் அணி சமைக்க பெண்கள் அணியில் இருப்பவர்கள் அதற்கான உணவுகளை ஷாப்பிங் செய்து வர வேண்டும். ஆனால் முதல் டாஸ்க்கில் பெண்கள் அணி சொதப்பி விட்டார்கள். அதற்கு காரணம் சாச்சனா தான் என்று பெண்கள் அணியில் இருப்பவர்கள் சிலர் குற்றம் சாட்டினார்கள். அதிலும் மஞ்சரி அதை பெருசு படுத்தி பேசியதால் கேப்டன் பதவியை இழக்கும் தருணத்தில் சாச்சனா சூழ்ச்சி செய்துவிட்டார்.

இதையெல்லாம் தாண்டி இன்று ராஜா ராணி விளையாட்டு போய்க் கொண்டிருக்கிறது. இதில் சாச்சனா தவிர மற்றவர்கள் அனைவரும் நன்றாக விளையாடி வருகிறார்கள். அதிலும் பவித்ரா, மஞ்சரி மற்றும் தீபக் அவர்களுக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து வருகிறார்கள். ஆனால் ராணி என்ன பண்ணாலும் அவரை கலாய்க்கும் விதமாகத்தான் இருக்கிறது.

இப்படி இந்த டாஸ்க் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இதற்கிடையில் லவ் ட்ராக்கும் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் கிட்டத்தட்ட நான்கு போட்டியாளர்கள் காதலிக்க போய்விட்டார்கள். அதிலும் பெண்கள் அணி தான் ஆண்கள் மீது கிரஷ்ஷாக இருக்கிறார்கள். அவர்களில் தர்ஷிகா, விஷால் மீது கொஞ்சம் மயக்கத்தில் இருந்தார். அத்துடன் தன் காதலை வெளிப்படையாகவும் வெளிப்படுத்தி விட்டார். ஆனால் இதற்கெல்லாம் நான் ஒத்து வரமாட்டேன் என்பதற்கு ஏற்ப விஷால் பதிலடி கொடுத்துவிட்டார்.

இருந்தாலும் தர்ஷிகா மனதில் விஷால் புகுந்து விட்டார். இவரை அடுத்து ஜாக்லீனுக்கு, முத்து மீது ஒரு கண்ணு இருக்கிறது. அந்த வகையில் தர்ஷிதாவிடம் முத்து பார்வை ஏதோ கிரங்கடிக்க வைக்கிறது. பெண்களை பார்க்கும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. அவரைப் பார்த்தால் ஏதோ ஒரு உணர்வு தோன்றுகிறது என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

இவருக்கு அடுத்ததாக போனதிலிருந்து இதுதான் வேலை என்பதற்கு ஏற்ப ரயான், சௌந்தர்யாவை விட்டு விலகுவதே இல்லை. அதற்கு ஏற்ற மாதிரி சௌந்தர்யாவும் பின்னாடியே அலைய ஆரம்பித்து விட்டார். எங்கே போனாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக தன்னுடைய கிரஷ் என்று அனைவரிடமும் வெளிப்படையாக வர்ஷினி, அருணை பார்த்து சொல்லிவிட்டார்.

அந்த வகையில் வர்ஷினி மனதிற்குள் அருண் கொஞ்சம் இடம் பிடித்து விட்டார். ஆனாலும் அருணுக்கு வெளியில் ஆள் காத்துக் கொண்டிருப்பதால் இவர்களுடைய காதல் டைம் பாஸ் ஆகவே முடிய போகிறது. இப்படி இந்த நான்கு பெண் போட்டியாளர்களும் லவ் டிராக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் விட நான் தனி ட்ராக் என்பதற்கு ஏற்ப பவித்ரா, ஜெஃப்ரியுடன் அக்கா தம்பி பாசத்தை காட்டும் விதமாக ஒரு அழகிய உணர்வை வெளிப்படுத்தி பாசத்தை கொட்டுகிறார். ஆனால் அன்சிதா மட்டும் நான் வந்த வேலை தான் பார்ப்பேன் என்று சமத்து குட்டியாக இருக்கிறார். நல்லவேளை அர்னாவ் வெளியே போனது நல்லதா போச்சு. இல்லையென்றால் அன்சிதா பற்றி தெரியாமல் போயிருக்கும்.

Trending News