ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ஏவிஎம் கூட்டணியில் கேப்டன் வெற்றி கண்ட 4 படங்கள்.. ஆக்ரோஷமான நடிப்பை வெளிக்காட்டிய விஜயகாந்த்

Vijaykanth alliance 4 films AVM: நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை குறைவால் நேற்று அவருடைய உயிர் மண்ணை விட்டு பிரிந்து இருக்கிறது. இவருடைய பிரிவு யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பெரும் துயரத்திற்கு தள்ளிவிட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் எங்கு திரும்பினாலும் விஜயகாந்தின் இறப்பிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து மக்களும் அவர்களுடைய ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள்.

இதுவரை இவர் செய்த நல்ல விஷயங்கள், சினிமாவில் இவருடைய நடிப்பின் மூலம் ஏற்படுத்திய சமூக அக்கறை மற்றும் எதுக்குமே அஞ்சாத சிங்கமாக களமிறங்கி பேசிய அரசியலிலும் சரி இவரை வெறுக்கும் அளவிற்கு எந்த ஒரு விமர்சனங்களும் வந்ததே இல்லை. அப்படிப்பட்டவரின் இறப்பை ஜீரணிக்க முடியாத அளவிற்கு மக்கள் அனைவரும் கண்ணீர் வெதும்பி அவரை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இவருடன் நடித்த பல நடிகர்களும் நடிகைகளும் நேரில் போய் பார்த்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். எந்த ஒரு நடிகருக்கும் அரசியல்வாதிக்கும் கிடைக்காத ஒரு விஷயம் விஜயகாந்துக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது மக்களின் அன்பு தான். இப்படி கோடனகோடி மக்களின் அன்பை சம்பாதித்திருக்கிறார்.

Also read: ஊசி, மாத்திரைகளால் மரண வேதனையை அனுபவித்த கேப்டன்.. இறந்த பின் வெளிவரும் சோகம்!

மேலும் இவருடைய பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பலரும் அவர்களுடைய துக்கங்களை பகிர்ந்து வருகிறார்கள். அத்துடன் விஜயகாந்த் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ஏவிஎம் நிறுவனத்துடன் நான்கு படங்களில் நடித்து வெற்றி கண்டு இருக்கிறார். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த சிவப்பு மல்லி படம் விஜயகாந்த் ஒரு புரட்சி படமாக அமைந்திருக்கிறது.

அதாவது ஏழைக்கும், உழைக்கும் வர்க்கத்திற்காக போராடும் இவருடைய வசனங்கள் அனைத்தும் மக்களின் பேராதரவை பெற்றிருக்கும். அடுத்ததாக 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தர்ம தேவதை படத்தில் அநியாயமாக நடக்கும் விஷயங்களுக்கு எதிர்த்து ஆக்ரோஷமாக உரிமை குரல் கொடுக்கும் விதமாக விஜயகாந்த் அவருடைய நடிப்பை பிரமாதமாக கொடுத்திருப்பார்.

அதே மாதிரி 1991 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகர் காவல் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், 1994 ஆம் ஆண்டு சேதுபதி ஐபிஎஸ் படத்தில் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கைத்தட்டலை வாங்கி இருப்பார். இப்படி ஏவிஎம் நிறுவனத்துடன் நான்கு படங்களில் சேர்ந்து நடித்து வெற்றி கண்ட விஜயகாந்துக்கு தற்போது ஏவிஎம் நிறுவனம் கண்ணீர் அஞ்சலி செலுத்திருக்கிறார்கள்.

Also read: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் 5 ஆசைகள்.. பணத்தாசை இல்லாதவரை பதவிக்காக வீழ்த்திய நரிக்கூட்டம்

Trending News