வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலர், லியோ கொடுத்த தைரியம்.. சரசரவென தீபாவளிக்கு வரிசை கட்டும் 4 படங்கள்

என்னதான் அவ்வப்போது படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் பண்டிகை நாளில் வெளிவரும் படங்களுக்கு என ஒரு தனி ஸ்பெஷல் இருக்கிறது. அதாவது எப்போதுமே பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களின் படங்கள் தான் தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறைகளை குறிவைத்து களமிறங்கும்.

ஏனென்றால் வழக்கமாக வரும் கலெக்சனை விட அப்போது இரண்டு மடங்கு அதிக வசூல் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் சாதாரணமாகவே அவர்களின் திரைப்படங்களை திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள் பண்டிகை தினத்தன்று வரும் படங்களை அமர்க்களப்படுத்தி விடுவார்கள். அந்த வகையில் இந்த வருட பொங்கலை விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் அலங்கரித்தது.

Also read: ஒரு வழியா தளபதி தப்பிச்சிட்டாரு.. விஜய் 68 படத்தை இயக்கும் கலகலப்பான இயக்குனர்

அதைத்தொடர்ந்து இந்த தீபாவளிக்கு டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் இப்போது ரஜினியின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதனால் இந்த இரு படங்களும் தீபாவளிக்கும் மோதிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் இந்த ரேசிலிருந்து விலகினார்கள்.

அந்த வகையில் ஜெயிலர் வரும் ஆகஸ்ட் மாதமும், லியோ அக்டோபர் மாதமும் வெளியாக இருக்கிறது. அதனாலேயே இப்போது பல ஹீரோக்களும் தீபாவளிக்கு தங்கள் படங்களை களமிறக்கி உள்ளனர். அதன் வரிசையில் கார்த்தியின் நடிப்பில் மிக பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் ஜப்பான் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு வெளிவர இருக்கிறது.

Also read: தளபதியை வைத்து டிஆர்பியை ஏற்றிய சன் டிவி.. கோட்டை விட்ட விஜய் டிவி

அதே போன்று விறுவிறுப்புடன் தயாராகிக் கொண்டிருக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் அதை நாளை தான் குறி வைத்துள்ளது. பீரியட் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாக வெளிவராமல் தவித்துக் கொண்டிருந்த அயலான் படமும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.

அதைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படி நான்கு படங்கள் பண்டிகை தினத்திற்கு வெளியாவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ரஜினி, விஜய் கொடுத்த தைரியத்தால் இந்த ஹீரோக்கள் தைரியமாக ரசிகர்களை சந்திக்க வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: பார்த்திபனாக மாறிய விஜய்.. இணையத்தில் லீக்கான லியோ சீக்ரெட்

Trending News