பொதுவாக கொரோனா காலகட்டத்தில் தலை தூக்கிய ஓடிடி நிறுவனங்கள் தற்போது வரை மிக பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திரையரங்குக்கு சென்று படங்களை பார்ப்பதை விட வீட்டுக்குள்ளேயே ஓடிடி தளத்தில் படங்களை பார்க்க ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.
இது தவிர சில படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பு ஓடிடியிலும் வெளியாகி அங்கும் கல்லாகட்டி வருகிறது. அப்படி இந்த வாரம் வெளியான படங்களை பார்க்கலாம். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படம் தியேட்டரில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.
Also Read : திரிஷாவுக்கு பொருத்தமான ஜோடியாக நடித்த 5 நடிகர்கள்.. நிஜத்திலும் வளைத்து போட நினைத்த சிம்பு
இந்நிலையில் பத்து தல படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. திரையரங்கை போலவே ஓடிடியிலும் தற்போது பத்து தல படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி உள்ள தசரா படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
மேலும் தெலுங்கில் வெளியான வியாவஸ்தா படம் ஜி5 இல் வெளியாகி உள்ளது. சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சிட்டால் வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இதற்காக சமந்தாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.
Also Read : மேடையில் கேட்கப்பட்ட வில்லங்கமான கேள்வி.. கழுவுற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப் ஆன சிம்பு
இது தவிர தமிழ், ஆங்கிலம் போன்ற மற்ற மொழி படங்களும் ஓடிடியில் வெளியாகிறது. இப்போது ஓடிடி நிறுவனங்களுக்காகவே படம் எடுத்து வருகிறார்கள். மேலும் யூடியூப் போன்ற மற்ற பொழுதுபோக்கு தளங்களும் ஓடிடியால் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இது ஏதுவாக அமைந்துள்ளது.
ஏனென்றால் பொதுவாக தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்களிடம் கமிஷன் போன்றவை கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் ஓடிடியில் இது தேவையில்லை என்பதால் நேரடியாக தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் தயாரிப்பாளர்களை வந்து சேருகிறது. இந்நிலையில் இதே போல் அடுத்த வாரமும் நிறைய புதிய படங்கள் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
Also Read : பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த கீர்த்தி சுரேஷ்.. ஒரே பாட்டால் பயத்தில் இருக்கும் டாப் ஹீரோயின்கள்