வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூர்யா கைவிட்ட 4 படங்கள்.. சிங்கத்துக்கு கூட முட்டி மோதி ட்ராப்பான வணங்கான்

4 films that Actor Surya gave up in tamil cinema: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா அவர்கள், சினிமாவுக்கு வந்த புதிதில் சற்று தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு படிப்படியாக அதற்கான தகுதியையும் திறமையும் வளர்த்துக் கொண்டு பான் இந்தியா மூவியாக தேர்ந்தெடுத்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து தமிழனுக்கு பெருமை சேர்த்து வருகிறார். இருந்தாலும் சில காரணங்களால் அவர் தேர்ந்தெடுத்த சில படங்கள் பாதியிலே கைவிட்ட கதையும் உண்டு.

அருவா: கொரோனா ஊரடங்கால் பாதிப்புக்கு உள்ளானது மக்கள் மட்டுமல்ல இந்த அருவாவும் தான். அதாவது ஐந்து வெற்றி படங்களுக்கு பின் சூர்யா ஹரி கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் அருவா. வேல், ஆறு, சிங்கம் மாதிரி இந்த படமும் வந்தா ஹிட் என எதிர்பார்க்கும் போது, கொரோனா வந்து மொத்தத்தையும் தடுத்து நிறுத்திவிட்டது. அதற்குப்பின் அருவாவை பற்றி பேச்சு இல்லை.

துப்பறியும் ஆனந்தன்: வாரணம் ஆயிரம் படத்திற்கு பின் கௌதம் மேனன் மற்றும் சூர்யா இணைந்த இக்கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பு கிடையே துப்பறியும் ஆனந்தன் கதையில் ஒன்றிணைந்தது.  க்ரைம் நாவலை மையமாகக் கொண்ட கதையில், அறிவிப்புடன் நிறுத்திவிட்டு  பர்ஸ்ட் லுக் போஸ்டரோடு ஆனந்தனை  மறந்து போனார் கௌதம்.

Also read: சென்னை அணியை வாங்கிய சூர்யா.. சிவகுமார் குடும்பத்தில் அடிப்பிடி சண்டை வராத குறைதான்

இரும்புக்கை மாயாவி: விக்ரம் படத்தில் கடைசிய ரோலக்ஸ் ஆக வந்து அலப்பறைய கிளப்பிய சூர்யா ஏற்கனவே லோகேஷின் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவியில் நடிக்க இருந்தாராம். படத்தின் பட்ஜெட் அதிகம் என  கூறப்பட்ட நிலையில் போஸ்டரோடு நிறுத்திக் கொண்டு இப்போதைக்கு அதை தன் ட்ரீம் ப்ராஜெக்ட் ஆக முடிவு கட்டி வைத்திருக்கிறாராம் லோகேஷ். பியூச்சர்ல கண்டிப்பா லோகேஷ் மற்றும் சூர்யாவுடன் இணைந்து இரும்புக்கை மாயாவியை எதிர்பார்க்கலாம்.

வணங்கான்: பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா மற்றும் பிதாமகன் இரண்டுமே சூர்யாவிற்கு நல்ல ஒரு பெயரும் புகழும் பெற்று தந்தது. 18 ஆண்டுகள் கழித்து இதே கூட்டணி திரும்பவும் இணைந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் 2022 ஆம் ஆண்டு சூர்யாவுடன் தொடங்கப்பட்ட வணங்கான் படப்பிடிப்பு 2023 திடீரென அருண் விஜய் உடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்ட போது தான் சூர்யா படத்தில் நடிக்கவில்லை என்றே தெரிந்தது. என்ன நடந்ததோ வெளிப்படையாக தெரியாத நிலையில் தனக்கு செட்டாகவில்லை என்று நாகரிகமாக விலகிக் கொண்டார் சூர்யா.

Also read: மயிலு பொண்ணு குயிலுடன் ரொமான்ஸ் பண்ண தயாராகும் சூர்யா.. இது நியாயமா கர்ணா?

Trending News