வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஆர்ஜே பாலாஜி லைன் அப்பிள் இருக்கும் 4 படங்கள்.. 20 கோடி பட்ஜெட்டில் சொர்க்கவாசலுக்கு போகும் தம்பி

RJ Balaji: என்னதான் திறமை இருந்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக ஆர்ஜே பாலாஜி பல படங்களில் கதாநாயகனாக ஜொலித்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக நுழைந்த இவர் கிடைக்கிற எந்த வாய்ப்பையும் விடுவதாக இல்லை என்று சின்ன சின்ன கேரக்டரிலும் நடித்து தற்போது நடிகராகவும், இயக்குனராகவும் பயணித்து வருகிறார்.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். இந்த படமும் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றியை கொடுத்தது. அடுத்ததாக குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக வீட்ல விசேஷம் படத்தை இயக்கி நடித்தார்.

புது படத்தில் கமிட் ஆகியிருக்கும் ஆர்.ஜே பாலாஜி

இப்படமும் ஆர்கே பாலாஜிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனைத் தொடர் ரன் பேபி ரன் படத்திலும் நடித்து இவருடைய கதாபாத்திரத்தை பேசும்படி சிறப்பாக கொடுத்துவிட்டார். அடுத்து சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்து மக்களிடமிருந்து அபார நம்பிக்கையே பெற்று விட்டார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் போட்ட பட்ஜெட்டை தாண்டி லாபம் கொடுக்கும் வகையில் ஆர்.ஜே பாலாஜிக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது.

அதனால் இவரை நம்பி படத்தை எடுக்கலாம் என்று தயாரிப்பாளர்களும் முடிவு பண்ணி விட்டார்கள். அதனால் மாசாணியம்மன் மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் படத்தை எடுப்பதற்கு ஆர் ஜே பாலாஜி தயாராகி விட்டார். இதில் மூக்குத்தி அம்மன் 2 வில் நயன்தாரா அல்லது திரிஷா நடிப்பதற்கு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி ஒரு படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் ஆர்ஜே பாலாஜியின் பிறந்தநாளுக்கு வெளிவந்தது. இதில் கையில் ரத்தக்கரை படிந்த கத்தியுடன் கேக்கை வெட்டும் தோரணையுடன் மிரட்டான போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் இதுவரை பார்க்காத ஆர் ஜே பாலாஜி ஒரு திரில்லர் ஸ்டோரியை கொண்டு வரப் போகிறார்.

இப்படத்தை தொடர்ந்து குட் நைட் படத்தை தயாரித்த நிறுவனத்துடன் ஆர்ஜே பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்க உள்ளார். அந்த வகையில் இதுவரை ஆர்.ஜே பாலாஜி நடித்த படங்களிலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப் போவதாக கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 20 கோடி வரை பட்ஜெட் தாண்டும் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கப் போகிறார். அதற்காக சம்பளமாக 7 கோடி பேசப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆர்ஜே பாலாஜிக்கு 4கோடி சம்பளம் வழங்குகிறார்கள். இப்படத்தின் டைட்டில் சொர்க்கவாசல் என்று வைக்கப்பட்டு முதல் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். தற்போது அதிக பட்ஜெட்டில் சொர்க்கவாசலுக்கு போக அதிர்ஷ்டமும் அடித்திருக்கிறது.

ஆர்ஜே பாலாஜிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்

- Advertisement -spot_img

Trending News