புதன்கிழமை, ஜனவரி 22, 2025

1000 கோடி முதலீடு, லைக்காவால் விழி பிதுங்கி நிற்கும் ரஜினி, அஜித்.. மரண அடி வாங்க போகும் டாப் ஹீரோக்களின் 4 படங்கள்

லைக்கா நிறுவனம் இப்போது தான் தமிழ் சினிமாவில் ஆணித்தனமாக கால்தடம் பதித்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்க ஆரம்பித்தது. அந்த வகையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் நல்ல வசூலையும் ஈட்டி இருந்தது. இந்த சூழலில் அமலாக்கத் துறையினர் லைக்கா நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதனால் இப்போது பெரிய ஹீரோக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் லைக்கா தயாரிப்பில் உள்ளடங்கிய படங்கள் இப்போது முடங்கி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் படங்களை தயாரிக்க லைக்கா சுபாஸ்கரன் திட்டமிட்டு இருந்தார்.

Also Read : நீ பேசுனது எங்க கொண்டு வந்து விட்டு இருக்கு பாத்தியா? பார்த்திபனால் படாத பாடுபடும் லைக்கா

அதன்படி ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும் படத்தை வெளியிடாத நிலை ஏற்பட உள்ளது. இதேபோல் லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்திற்கும் இதே நிலைமை தான் உருவாகியுள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் லைக்காவை நம்பி இறங்கி இருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த பிரச்சனை தீரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.

Also Read : அக்கட தேச சந்தானத்திற்கு குவியும் வாய்ப்பு.. சிவகார்த்திகேயன், ரஜினி என எகிறும் மார்க்கெட்

அதுமட்டும்இன்றி ரஜினி ஜெயிலர் படத்தை முடித்த கையோடு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கம் படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தையும் லைக்கா தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்போது இந்த படம் தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அஜித்தின் ஏகே 62 படத்தின் விடாமுயற்சி என்ற டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

இப்போது லைக்கா பிரச்சனையில் சிக்கி இருப்பதால் இந்த படம் தொடங்குவது தாமதமாகும் என கூறப்படுகிறது. மேலும் சில படங்களும் லைக்காவின் லயன் அப்பில் இருந்து வருகிறது. ரஜினி, கமல், அஜித், லாரன்ஸ் போன்ற நடிகர்கள் மரண அடி வாங்கியுள்ளனர். தற்போது அமலாக்க துறையினரால் இந்த படங்கள் எல்லாம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வரப் போகிறார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Also Read : தயாரிப்பாளர்களை பெரியளவில் வாழ வைத்த 6 படங்கள்.. கமலை பார்த்து பொறாமை பட்ட ரஜினி

Trending News