வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

திரிஷா வலையில் சிக்கி எஸ்கேப் ஆன 4 ஹீரோக்கள்.. பல்வாள் தேவனால் நிச்சயதார்த்தத்தோடு நின்ற கல்யாணம்

திரிஷாவுக்கு தற்போது 40 வயதை கடந்தாலும் சினிமாவுக்கு வந்த புதிதில் எப்படி இருந்தாரோ அதே இளமையுடன் தான் தற்போது வரை இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவை பொறுத்தவரையில் குறிப்பிட்ட காலம் மட்டுமே ஹீரோயின்களுக்கு மார்க்கெட் இருக்கும்.

ஆனால் திரிஷா சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் தாண்டியும் தற்போது வரை ஹீரோயின் அந்தஸ்துடனே இருக்கிறார். மேலும் திரிஷா பல காதல் சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். அவ்வாறு த்ரிஷாவின் வலையில் சிக்கி அதன் பின்பு எஸ்கேப் ஆன 4 நடிகர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Also Read : ஹைதராபாத்தை விட்டு விரட்டப்பட்ட திரிஷா.. லிவிங் ரிலேஷன்ஷிப்பால் பயந்து போன திரையுலகம்

சித்தார்த் : ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த்துடன் இணைந்து திரிஷா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தது. சித்தார்த்தை பொறுத்தவரையில் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஏன் சமந்தா உடன் கூட ரிலேஷன்ஷிப்பில் சித்தார்த் இருந்ததாக செய்திகள் வெளியானது.

விஜய் : தமிழ் சினிமாவில் பெஸ்ட் ஜோடிகளில் முதலிடம் த்ரிஷா மற்றும் விஜய் தான். இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி போன்ற பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளனர். இப்போது லியோ படத்திலும் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. மேலும் விஜய், திரிஷா இருவரையும் இணைத்து வைத்து நிறைய செய்திகள் வெளியாகி உள்ளது.

Also Read : திரிஷாவின் முதல் வெற்றி படம்.. இல்லாத ஒரு விஷயத்துக்காக அடித்து கொள்ளும் நம்பர் நாயகிகள்

விஜய் சேதுபதி : விஜய் சேதுபதி பொதுவாக ஒரு நடிகையுடன் ஜோடி போட்டால் அடுத்த இரண்டு, மூன்று படங்களில் அதே நடிகையுடன் சேர்ந்து நடிப்பார். இந்நிலையில் 96 படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தப் படத்தின் தாக்கம் தற்போது வரை ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி, திரிஷாவை இணைத்து வைத்து கிசுகிசுக்கப்பட்டது.

ராணா டகுபதி : பாகுபலி படத்தில் பல்வாள் தேவனாக நடித்தவர் ராணா டகுபதி. இவரும் த்ரிஷாவும் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வருண்மணியன் என்ற தொழிலதிபருடன் திரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அது கல்யாணம் வரை செல்லாமல் நின்றதற்கு ராணா டகுபதி தான் காரணம் என்று ஒரு செய்தி பரவியது.

Also Read : குந்தவை திரிஷா காதலனுடன் டேட்டிங் செய்த பிக் பாஸ் பிரபலம்.. பகிரங்கமாக ஒத்துக் கொண்ட நடிகை

Trending News