செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெயிலரில் சூப்பர் ஸ்டாருடன் இணைய போகும் 4 ஹீரோயின்கள்.. தலைவரோட ஆட்டம் ஆரம்பம்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு, இயக்குனர் நெல்சன்க்கும் ஜெயிலர் படம் மிக முக்கியமான ஒரு புராஜக்ட், இருவருக்குமே ஜெயித்தே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயம். ரஜினியின் சமீபத்திய படங்கள் எதுவும் அந்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. அவருடைய ராசிகர்களே எதிர்மறை விமர்சனம் கொடுக்கும் அளவுக்கு அவருடைய கடைசி படமான அண்ணாத்தே இருந்தது.

இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் ரஜினி நெல்சனுடன் கை கோர்த்து இருக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு மொத்தம் நான்கு ஹீரோயின்கள். ஏற்கனவே ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம் எனவும் அதில் ஒரு ரஜினிக்கு தமன்னா ஜோடியாகவும், வயதான ரஜினிக்கு ரம்யாகிருஷ்ணன் ஜோடி சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின, இவர்களுடன் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா அருள் மோகன் என ரஜினிக்கு மொத்தம் 4 ஹீரோயின்கள் என பேசப்படுகிறது.

ரஜினிக்கு இருக்கும் மற்றொரு அழுத்தம் விக்ரம் படத்தின் வெற்றி. சில ஆண்டுகளாக வெற்றி படங்களே கொடுத்திடாத கமலஹாசனுக்கு ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக விக்ரம் அமைந்தது. நொடிக்கு நொடி சஸ்பென்ஸ், த்ரில்லர் என பட்டையை கிளப்பிய இந்த படத்தில் சூர்யாவின் கேமியோ ரோல் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி தென்னிந்தியாவே கொண்டாடிய படமாக அமைந்தது.

ரஜினிக்கு இது ஒரு இக்கட்டான சூழ்நிலை தான், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்பார் மற்றும் அண்ணாத்தே ஒரு மிகப்பெரிய ஏமாற்றைத்தை கொடுத்தது, மேலும் அவரின் சக போட்டியாளர் ஆன கமல் படத்தின் இந்த திடீர் வெற்றி ரஜினியின் பர்பார்மன்ஸ் மீது கதை தேர்வின் மீதும் ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.

ரஜினிக்கு இப்படி என்றால் நெல்சன் நிலைமை இன்னும் மோசம். கோலமாவு கோகிலா, டாக்டர் என டார்க் காமெடியில் பட்டை கிளப்பிக் கொண்டிருந்த நெல்சன், விஜயுடன் இணையும் போது அது ஒட்டுமொத்த திரை உலகத்தையும் அந்த படத்தை உற்று பார்க்க வைத்தது. ஆனால் நெல்சனின் போறாத காலம் பீஸ்ட் திரைப்படம் வெற்றியடையவில்லை. எனவே இந்த முறை பயங்கர மாஸாக ஒரு வெற்றி படம் கொடுத்தே ஆக வேண்டும் என உறுதியாக இருக்கிறார் நெல்சன்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஹைதிராபாத்தில் நடைபெற உள்ளது, ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என சூப்பர் ஸ்டார் அறிவித்துள்ளார்.

Trending News