புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பிரபாஸ் ஹேர் ஸ்டைலுக்கு மட்டுமே 4 லட்சத்தை காலி செய்த இயக்குனர்.. ராஜமௌலி, சங்கருக்கு அண்ணனா இருப்பாருபோல!

இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்பதற்கு பெயர் போன ஷங்கர் மற்றும் ராஜமவுலி ஆகிய இருவரையும் ஒரு இயக்குனர் ஓரம் கட்டி விட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆகவேண்டும்.

தற்போதைக்கு இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே சமீபகாலமாக பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

prabhas-cinemapettai
prabhas-cinemapettai

அதற்கெல்லாம் அச்சாரம் போட்டது பாகுபலி படம் தான். பகுபலி படங்களுக்குப் பிறகு பிரபாஸின் சினிமா மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. இப்போதெல்லாம் அவர் கேட்காமலேயே பல நூறு கோடிகளில் சம்பளம் வந்து குவிகிறது.

இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சலார். இந்த படத்தை கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் சலார் படத்தில் பிரபாஸின் ஹேர் ஸ்டைலுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 4 லட்சம் வரை செலவு செய்துள்ளாராம் இயக்குனர் பிரசாந்த் நீல். இதைக் கேட்ட இந்திய சினிமாவே ஒரு நிமிஷம் அதிர்ச்சியடைந்து விட்டதாம்.

prashanth neel-salaar-cinemapettai
prashanth neel-salaar-cinemapettai

போகிற போக்கை பார்த்தால் ஷங்கர் மற்றும் ராஜமவுலி ஆகிய இருவருக்கும் செம போட்டியாக வந்து விடுவார் போல என இப்போதே டோலிவுட்டில் கிசுகிசுக்க தொடங்கி விட்டனர்.

Trending News