புதன்கிழமை, ஜனவரி 29, 2025

ஒரே படத்தில் இணையும் 4 ஜாம்பவான்கள்.. அதிரிபுதிரியாக எடுக்கப் போகும் மணிரத்தினம்

Director Manirathinam: இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது. அந்த அளவிற்கு வெற்றி இயக்குனராக தனது படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் தற்போது அதிரிபுதிரியாக படத்தை எடுக்கப் போகிறார். இந்த ஒரே படத்தில் நான்கு ஜாம்பவான்கள் இணைந்து கலக்கப் போகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வெற்றியை தன் பக்கம் வைத்துக் கொண்டு எல்லா பக்கமும் ஜெயித்துக் கொண்டு வருகிறவர் கமலஹாசன். இவரை வைத்து மணிரத்தினம் மிகப்பெரிய பிரமாண்ட படத்தை எடுக்கப் போகிறார். கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.  இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: தளபதி பட வாய்ப்பை தவறவிட்ட ஹாண்ட்சம் ஆக்டர்.. தளபதி படத்தில் மணிரத்தினம் முதலில் செலக்ட் செய்த கலெக்டர்

இதனைத் தொடர்ந்து மணிரத்னத்துடன் நடிக்கப் போகும் இப்படம் முழுக்க முழுக்க இந்திய ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு படமாக இருக்கப் போகிறதாம். இதில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறார். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் மம்முட்டியும் நடிக்கப் போகிறார்கள். அடுத்ததாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் இவருக்கு செட்டாகவில்லை. அதனால் இவருக்கு பதிலாக சூர்யா நடிக்கப் போகிறார் எனக் கூறப்பட்டது. ஆனால் அவருடைய படங்களில் பிஸியாக இருப்பதால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் கடைசியாக விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Also read: அஜித்துக்கு எதிராக கட்டம் கட்டிய சுகாசினி, மணிரத்தினம்.. பத்தே நாளில் படத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதன் பின்னணி

ஏற்கனவே விக்ரமுக்கு ரோலக்ஸ் கேரக்டர் கொடுக்கப்பட்ட போது அவர் அதை மறுத்துவிட்டு தற்போது வரை வருந்தி கொண்டு வருகிறார். அதனால் இந்த முறை அந்த தவறை செய்து விடக்கூடாது என்பதற்காகவும், கமலுக்காக ஒத்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

இப்படி இந்த படத்தில் இந்த நான்கு பேர் கூட்டணி அமைந்து விட்டால் கண்டிப்பாக இந்தியாவில் முக்கிய படமாக பார்க்கப்பட்டு வரும்.  அதனால் கண்டிப்பாக இந்திய சினிமாவில் ஒரு தரமான படம் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: கமலுடன் ஓவர் ரொமான்ஸ் செய்த முப்பெரும் தேவியர்கள்.. 5 மடங்கு நெருக்கத்தை ஒரே படத்தில் காட்டிய நடிகை

Trending News