சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

பொங்கல் ரேசில் களம் இறங்கும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உடைக்க வரும் ஹீரோ

Pongal Release Tamil Movies: பெரும்பாலும் பண்டிகை நாட்கள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படம் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 படங்கள் மோதிக்கொள்ள இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்த படம் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தாலும் சில காரணங்களினால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை லாக் செய்து வைத்திருக்கின்றனர். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் அரண்மனை.

ஆனால் அடுத்தடுத்த பாகங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பொங்கல் ரிலீஸில் இடம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லால் சலாம் பொங்கல் ரிலீசுக்கு வெளியாக இருக்கிறது.

Also Read : கடைசியில் சிவகார்த்திகேயனுக்கு இந்த நிலைமையா?. கெட்ட நேரத்தால் அடி மேல் அடி வாங்கும் பரிதாபம்

அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்டு ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி வசூலை வாரி குவித்ததால் அவருடைய அடுத்தடுத்த படங்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகி கொண்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு முக்கிய படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதாவது தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் அயலானுடன் போட்டி போட இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

கண்டிப்பாக அயலான் படத்திற்கு கேப்டன் மில்லர் டஃப் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர், அரண்மனை 4 பொங்கல் ரேசில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியானாலும் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read : வெளியில் தலை காட்ட முடியாமல் தவித்த சிவகார்த்திகேயன்.. ஒரே வார்த்தையில் இமான் வைத்த முற்றுப்புள்ளி

Trending News