வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

2 இல்ல.. நாலு.. படம் மட்டும் கொஞ்சம் சறுக்கினா தயாரிப்பாளர் திருவோடுதான் ஏந்தனும்

சின்ன பட்ஜெட் படங்கள், தனித்துவமான கதை, சிறப்பான மேக்கிங் மூலம் மக்கள் மனதை கவருகிறது. ஆனாலும், ஒரு படத்தை வெறும் பிசினெஸ் ஆக மட்டும் பார்ப்பவர்கள், 4 மடங்கு லாபத்தை அல்ல வேண்டும் என்ற ஆசையில், அதிக பொருட்ச்செலவில் படத்தை எடுக்கின்றனர். அதை மக்கள், எத்தனை ஆண்டு ஆனாலும் கொண்டாடும்படியான படமாக இருந்தால், அதிக பொருட்ச்செலவில் எடுப்பதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் நம் ஊரில் எடுக்கும் ஒரு சில படங்களை தவிர, வேறு எதுவும் மக்கள் மனதில் நிலைப்பதில்லை. உதாரணத்துக்கு, எந்திரன் முதல் பாகம், பொன்னியின் செல்வன், பாகுபலி போன்ற படங்கள் மக்கள் இன்றளவும் கொண்டாடும் படங்களாக உள்ளன. ஆனால் சமீபத்தில், வந்த தேவரா, தற்போது வந்த கங்குவா போன்ற படங்கள் நல்ல கதை திரைக்கதையோடு, சின்ன பட்ஜெட்டில் எடுத்திருந்தால் ஓடி இருக்கும். ஒரு படத்துக்கு அடிப்படை கதையும் திரைக்கதையும் தான். ஆனால் இப்போதெல்லாம், மேக்கிங்கில் மெனக்கிடும் இயக்குனர்கள், கதையில் கவனம் செலுத்துவதில்லை.

இந்த நிலையில், இந்த வருட இறுதிக்குள் வரப்போகும், மற்ற ஒரு மாபெரும் பட்ஜெட் படம் என்றால் அது புஷ்பா 2 தான். புஷ்பா 1 மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் அதிக பொருட்ச்செலவில் உருவாகியுள்ளது. தற்போது, படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

எதுக்கு இத்தனை பேர்..

சமீபத்தில் கூட, DSP இசை தனக்கு பிடிக்கவில்லை என்று அல்லு அர்ஜுன் பிரச்சனை செய்தார். மேலும் இசையமைப்பாளரை மாற்ற வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அது இப்போது சாத்தியமல்ல என்று படக்குழு தெளிவாக கூறிவிட்டது. இதனை தொடர்ந்து, DSP-யும் தமனும் இணைந்து இசையமைப்பார்கள்.

ஆனால் தற்போது இந்த படத்துக்கு 4 இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. பிரம்மாண்ட வெப் தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ்-க்கு கூட ஒரே ஒரு இசையமைப்பாளர் தான். அதை விட, பிரம்மாண்ட கதை அப்படி என்ன எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த படத்துக்கான பின்னணி இசை வேளையில், DSP, தமன் தவிர, சாம் சி.எஸ், அஜனீஷ் போன்றோர்கள் இசையமைக்கிறார்கள். இதை தொடர்ந்து ரசிகர்கள் இதை பார்த்து ஆச்சரியப்படுவார்கள் என்று பார்த்தால், எதுக்கு இத்தனை பேர்.. அப்படி என்ன ஊரில் இல்லாத படத்தை எடுக்கிறீர்கள். ஏற்கனவே, பட்ஜெட் எகிறுது..

ஒருவேளை படம், எதிர்பார்ப்புல கொஞ்சம் சொதப்பினா கூட, தயாரிப்பாளர் திருவோடு தான் ஏந்தனும். ஏன் என்றால், அந்த அளவுக்கு அதீத பட்ஜெட் போடுகிறார்கள். சமீபத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதால், இப்படியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News