சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சன் டிவியில் 4 சீரியல், விஜய் டிவியில் 3, ஜீ தமிழில் 2 சீரியல்.. புத்தம் புது நாடகங்கள் மூலம் போட்டி போடும் சேனல்கள்

New Serial: சீரியல் பார்க்காத இல்லத்தரசிகளை இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப ஒவ்வொரு குடும்பங்களும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்த்து வருகிறார்கள். அதனால் தான் ஒவ்வொரு சேனல்களும் புதுப்புது சீரியல்களை இறக்கி அவர்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

இதில் முதலிடத்தில் இருப்பது சன் டிவி தான், அந்த வகையில் கிட்டத்தட்ட 18 சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது சில சீரியல்களை ஓரங்கட்டி விட்டு அதற்கு பதிலாக புத்தகம் புது சீரியல்களை கொண்டு வர தயாராகி விட்டார்கள். அதில் ஆடுகளம், எதிர்நீச்சல் 2, ரோஜா 2 மற்றும் ராகவி போன்ற நான்கு சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது.

வருகிற திங்கள் கிழமை முதல் வாரத்திற்கு ஏழு நாட்களாக தினம் தோறும் இரவு ஒன்பதரை மணிக்கு எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் சீரியல் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். இதில் ரோஜா 2, ஆடுகளம் மற்றும் ராகவி போன்ற சீரியல் அடுத்தடுத்து வரப்போகிறது.

இதனை அடுத்து விஜய் டிவியில் பூங்காற்று திரும்புமா, சிந்து பைரவி மற்றும் தனம் போன்ற மூன்று சீரியல்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு புதுசாக கொண்டு வரப் போகிறார்கள். அத்துடன் பாக்கியலட்சுமி சீரியலும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலும் நிறைவு பெற போகிறது.

இதனை பார்த்த ஜீ தமிழ், சன் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளத்துடன் இரண்டு குடும்ப கதையை மையமாக வைத்து கொண்டு வரப் போகிறார்கள். அதில் மனசெல்லாம் மற்றும் கெட்டி மேளம். அதுவும் கெட்டி மேளம் என்ற சீரியல் ஒரு மணி நேரம் மெகா தொடராக ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.

இதில் பிரவீனா, பொன்வண்ணன், சாயாசிங், சிப்பு சூரியன், விராத் மற்றும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்த கதாநாயகி சௌந்தர்யா கமிட்டாகி இருக்கிறார்கள். இப்படி புத்தம் புது நாடகங்களை ஒவ்வொரு சேனல்களும் கொண்டு வந்து அவர்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்கு போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள்.

Trending News