தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவருக்கு தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மகேஷ்பாபு வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். மேலும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமா கேரியரை தொடங்க தான் தெலுங்கு பக்கம் மகேஷ்பாபு சென்றார்.
இந்நிலையில் மகேஷ் பாபு மற்றும் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான ஒக்கடு படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழில் விஜய் கில்லி என்ற பெயரில் அந்த படத்தில் நடித்திருந்தார். அதேபோல் போக்கிரி படமும் மகேஷ்பாபுக்கு தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
Also Read : மகேஷ் பாபுவின் இந்த பட காப்பி தான் விஜய்யின் வாரிசு.. ஆதாரத்துடன் வெளியான புகைப்படத்தால் வெடித்தது சர்ச்சை
அதேபோல் தான் தமிழிலும் விஜயின் போக்கிரி படம் உருவானது. அவ்வாறு கில்லி, போக்கிரி இந்த இரு படங்களும் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக அமைந்தது. மேலும் மகேஷ்பாபு 1999 வரை சென்னையில் தான் வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் தான் மகேஷ் பாபு தமிழில் சரளமாக பேசுவார். மேலும் சென்னையில் உள்ளவரை மகேஷ் பாபு, விஜய், சூர்யா, யுவன் சங்கர் ராஜா ஆகிய 4 பேரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக அப்போது இருந்துள்ளனர். இவர்கள் சென்னையில் லயோலா கல்லூரியில் படித்துள்ளனர். விஜயை விட ஒரு வருடம் சீனியராக சூர்யா வந்துள்ளார்.
Also Read : மகேஷ் பாபுவுக்கு போட்டியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. பல நாட்களாக போட்ட ஸ்கெட்ச்
எங்கு சென்றாலும் இந்த நால்வரும் சேர்ந்து தான் சுற்றுவார்கள். இவர்களை விட்டு மகேஷ் பாபு தனியாகச் செல்லும்போது கண்ணீருடன் கிளம்பினாராம். இப்போது விஜய், சூர்யா, மகேஷ் பாபு ஆகியோர் நடிகர்களாக சினிமாவில் முத்திரை பதித்துள்ளனர். அதேபோல் யுவன் சங்கர் ராஜாவும் ஒரு இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்தி உள்ளார்.
மேலும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படத்திலும் மகேஷ் பாபு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படம் வெளியானால் தான் இது குறித்து உண்மை தன்மை வெளியாகும். இப்போதும் இவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறதாம்.
Also Read : அய்யோ சாமி ஆளவிடுங்க.. விஜய்யும், மகேஷ் பாபுவும் மணிரத்னத்தை டீலில் விட இதான் காரணமாம்