புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இயக்குனர் சங்கரால் நடுத்தெருவுக்கு வந்த 4 தயாரிப்பாளர்கள்.. கர்மா சும்மா விடாது

4 Producers Who Left Cinema by Director Shankar: பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த சங்கர், தான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளரின் தலையில் ஒன்றுக்கு இரண்டாக பட்ஜெட்டை அதிகமாக எத்திவிடுவதில் வல்லவர். எதிர்பார்த்த அளவு படமும் கை கொடுக்காத நிலையில் பெருத்த அளவு நஷ்டத்தையே அடைந்தனர் தயாரிப்பாளர்கள். அவர்களில் சிலர்,

KT குஞ்சுமோன்: தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னுக்கு வந்த தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் இவர் சங்கருடன் ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். காதலனில் வரும் முக்காலா பாட்டுக்காக நாலு படத்திற்கு உண்டான செலவு செய்தேன் என்று புலம்பியுள்ளார் தயாரிப்பாளர் KT குஞ்சுமோன். காதலனுக்கு பிறகு படம் பண்ணுவதாக சொல்லி பேச்சுவார்த்தையுடன் விட்டுட்டுப் போனாராம் சங்கர்.

ஏ எம் ரத்னம்:  காதலனுக்கு பிறகு ஏ எம் ரத்னம் அவர்களிடம் அட்வான்ஸ் வாங்கி  இந்தியன் படத்திற்கு அடித்தளம் இட்டார் சங்கர். இயக்குனரின் மீது உள்ள நம்பிக்கையில் தாராளமாக செலவு செய்ய படமோ பட்ஜெட்டில் பிச்சிகிட்டு போனது. திட்டமிடப்படாமல் தாறுமாறாக செலவு செய்த பிரம்மாண்ட இயக்குனரை பார்த்து அசந்து போனாராம் தயாரிப்பாளர். இந்தியன் 2 விற்கு கூப்பிட்டபோது கும்பிடு போட்டு ஓடிப் போய் உள்ளார் ஏ எம் ரத்தினம்.

Also read: ஒரே ஒரு டெக்னாலஜிக்காக பல கோடியை வாரி இறைக்கும் சங்கர்.. அமெரிக்காவில் நடைபெறும் தரமான சம்பவம்

ஆஸ்கார் ரவிச்சந்திரன்: அந்நியனை தொடர்ந்து சங்கருடன் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இணைந்த திரைப்படம் “ஐ”. விக்ரமின் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஐ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் வசூலில் திணறி தயாரிப்பு நிறுவனத்தை சின்னா பின்னம் ஆக்கியது.

ஏவிஎம்: சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படம்  கமர்சியல் ரீதியாக ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் படத்திற்கான செலவோ எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஏவிஎம் நிறுவனமோ போதும்பா சாமி என படம் தயாரிப்பதே நிறுத்தி உள்ளது.

இந்தியன் 2 கான நிலைமையும் ரொம்ப மோசமாக உள்ளது. முதலில் இசையமைக்க ஒத்துக் கொண்ட அனிருத் ஏண்டா ஒத்துக்கொண்டோம் என்ற அளவிற்கு பாடாய் படுத்தி வருகிறார் இயக்குனர் சங்கர். இவர் படம் இயக்க அதிக காலத்தை எடுத்துக் கொண்டு ட்ரெண்டிங் சாங் வேணும் என்று அடம் பிடிக்க இந்தியன் 2, மேலும் மேலும் காலதாமதமாகி கொண்டே செல்கிறது.

Also read: 4 ஜாம்பவான்களை இழந்து ரெடியான இந்தியன் 2.. ஒரிஜினல் குணசேகரன் இல்லாததால் செத்துப்போன டிஆர்பி

Trending News