4 New Serials: எத்தனையோ சேனல்கள் போட்டி போட்டு பல புது சீரியல்களை கொண்டு வந்தாலும் சன் டிவிக்கு ஈடாக எந்த ஒரு சேனலும் வந்திட முடியாது. ஏனென்றால் அந்த அளவிற்கு சன் டிவியில் தரமான கதையை வைத்து மக்களின் பேவரைட் சேனலாக மாறிவிட்டது. அதனால் கிட்டத்தட்ட காலை மற்றும் மாலை என 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஒவ்வொரு சீரியல்கள் முடியும் தருவாயில் அடுத்த புது சீரியல்களை புதுசு புதுசாக இறக்குகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் புகுந்து ஆட்டம் போடும் புத்தம் புது நான்கு சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது என்ன சீரியல்கள் எப்படி மக்களை கவர்ந்திருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
இன்னும் வர இருக்கும் ஒரு சீரியல்
மல்லி: இந்த நாடகம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 20 எபிசோடுகள் முடிந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் ஆறாவது இடத்தை பிடித்து விட்டது. திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் கதை அம்மாவை இழந்து அம்மாவின் பாசத்திற்காக துடித்துக் கொண்டிருக்கும் ஒரு சின்ன குழந்தை வெண்பாவின் கதையை மையமாக வைத்து நகர்கிறது.
ஆனால் இன்னொரு பக்கம் என் குழந்தைக்கு நான் தான் எல்லாமாக இருப்பேன் என்று திமிர் பிடித்த பணக்கார கேரக்டரில் விஜய் வெண்பாவின் அப்பாவாக இருக்கிறார். இவர்களை எல்லாம் தன் அன்பினால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க கிராமத்திலிருந்து கனவை நிறைவேற்றும் மல்லி சிட்டிக்கு வந்து வெண்பாவுடன் பழகி கொஞ்சம் கொஞ்சமாக விஜய் மனதிற்குள் இடம் பிடிக்கும் கதை தான் இந்த நாடகத்தின் மையக்கருத்து.
லட்சுமி: கல்யாணம் ஆனாலும் தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய நினைக்கும் லட்சுமி வாழ்க்கைக்குள் செல்வம் நுழைகிறார். ஆனால் பேராசையும் பணத்தாசையும் பிடித்த செல்வம் குடும்பத்தில் உள்ள அம்மா மற்றும் அக்கா லட்சுமி யை சந்தோசமாக வாழ விடாமல் பல சதிகளை செய்து வருகிறார்கள். இதிலிருந்து கட்டிட்டு வந்த மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று செல்வம் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாக கழித்துக் கொண்டு வருகிறார்.
அனாமிகா: கிட்டத்தட்ட இந்த நாடகம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் போன்ற கதையை போல இருக்கிறது. அதாவது பணக்கார பெண்ணாக இருக்கும் அனாமிகா மற்றும் தொழிலதிபராக இருக்கும் ரிஷி அடுத்து நடுத்தர வர்க்கத்திலிருந்து வேலைக்கு வரும் நந்தா இவர்களுடைய முக்கோண காதல் கதையை காட்டும் விதமாக இந்த சீரியலின் கதை நகந்து வருகிறது. அத்துடன் ஒரு மறைமுகமான சக்தி, அனாமிகா வாழ்க்கையில் நுழைந்து கெட்டதுகளை செய்து நந்தாவின் உயிரையும் அரிசியின் அன்பற்ற அன்பையும் அச்சுறுத்தும் வகையில் ஒரு திரில்லர் கதையாக இந்த நாடகம் தொடர்கிறது.
மருமகள்: ஆரம்பித்த கொஞ்ச நாளிலே இந்த நாடகம் டி ஆர் பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டது. இதே போல தான் எதிர்நீச்சல் சீரியல் நுழைந்த கொஞ்ச நாளிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் சிம்ம சொப்பனமாக ஜொலித்தது. அதுபோல இந்த நாடகம் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் எதார்த்தமான நடுத்தர குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளையும், பண திண்டாட்டத்தால் வாடும் குடும்பத்தையும் மையமாக வைத்து வருகிறது.
மிகப்பெரிய கஞ்சத்தனத்தில் இருக்கும் பிரபுவுக்கும் தாராள மனசு கொண்ட ஆதரையும் இணையும் ஒரு காதல் கதை தான் மருமகள் சீரியலாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இவர்கள் இருவருடைய நடிப்பும் மக்களை கவர்ந்து விட்டது. அதனால் தொடர்ந்து விடாமல் இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.
இதனை அடுத்து இன்னும் ஆடுகளம் என்ற சீரியலும் வர இருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அன்பே வா சீரியலில் ஹீரோயினாக நடித்த டெல்னா மற்றும் விஜய் டிவியில் வந்த மௌன ராகம் இரண்டாம் பாகத்தில் நடித்த ஹீரோவும் கமிட்டாகி இருக்கிறார்கள்.
டிஆர்பி ரேட்டிங்கில் வெற்றி நடை போட்டு வரும் சன் டிவி
- கமுக்கமாக பதிலடி கொடுக்கும் சன் டிவி
- TRP Rating: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 சீரியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
- டிஆர்பி ரேட்டிங்கில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய டாப் 6 சீரியல்