ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உருண்டு புரண்டாலும் ஒட்டுற காசு தான் உடம்பில ஒட்டும்.. ஜெய் தவறவிட்டு கதறிய 4 படங்கள்

4 super hit films that Actor Jai missed in Tamil cinema : நம்ம தல அஜித் ஜெமினி படத்தை மிஸ் செய்த போது “நாம சாப்பிடற அரிசியில் மட்டும்தான் நம்ம பெயர் எழுதியிருக்கும்” என்று சொன்னாராம். மத்தவங்களோட வாய்ப்பை நம்மளும், நம்மளோட வாய்ப்பு மத்தவங்களாலும் பறிக்க முடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் வந்த வாய்ப்பை தவற விடுவது என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது ஜெய் விஷயத்தில் உண்மையாகி போனது.

ஜெய் கமிட்டாக இருந்த 4 சூப்பர் ஹிட் படங்களை பல்வேறு காரணங்களை காட்டி நிராகரித்து இன்று வரை புலம்பி வருகிறாராம்.

விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் 2010 வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் கார்த்திக், ஜெர்சியை கொண்டாடாத ரசிகர்களே இல்லை எனலாம். பேட்டி ஒன்றில்  இதைப்பற்றி பேசும்போது ஜெய் அவர்கள் விண்ணைத்தாண்டி வருவாயா நான் பண்ண வேண்டிய படம், மிஸ் பண்ணிட்டேன் என்று வருத்தத்துடன் கூறினார். இதை பார்த்த அவரது ரசிகர்களும்  ஜெய் இதில் நடிச்சிருக்க கூடாதா எங்கேயோ  போய் இருப்பாரே என்று வருத்தத்துடன் பதிவிட்டு இருந்தனர்.

Also read: ஜெய் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்.. இதற்கெல்லாம் காரணம் புண்ணியவதி நயன்தாரா தான்

ராட்சசன்: சைக்கோ கில்லர் கதையான ராட்சசன் திரைப்படத்தில் ஜெய்  இயக்குனரிடம் பேசிப் பார்த்ததாகவும் ராட்சசன் படத்திற்காக  கால்ஷீட் கொடுக்க ஆறு மாதங்கள் வெயிட் பண்ணியதாகவும் தெரிவித்து இருந்தார் இந்த படத்தின் தாமதத்தினாலேயே மற்ற படங்களில் நடிக்க போய் ராட்சசனை தவற விட்டதாக தெரிவித்து இருந்தார் ஜெய்.

நாடோடிகள்: ஜெய் மற்றும் சசிகுமார் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம் மாபெரும் வெற்றி பெற்றது.  இதனைத் தொடர்ந்து நாடோடிகள் படத்திலும் நடிக்க ஜெயிக்க வாய்ப்பு வரவே பல்வேறு காரணங்களை கூறி வந்த வாய்ப்பை நிராகரித்து வெற்றி படத்தை தவறவிட்டார்.

சிவா மனசுல சக்தி: ஜீவா மற்றும் ராஜேஷின் எவர்கிரீன் மூவி சிவா மனசுல சக்தி.  எப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவே காமெடி காட்சிகள் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும். அந்த அளவு சந்தானம் சிவாவின் காமெடி அல்டிமேட் ஆக இருந்தது.  மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் இந்த ஒரு வசனத்திற்காகவே இளைஞர்கள் திரும்பத் திரும்ப பார்த்தார்கள் எனலாம். சுப்பிரமணியபுரத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சிவா மனசுல சக்தியை தவற விட்டதாக பரிதாபத்துடன் கூறியுள்ளார் ஜெய்.

Also read: பக்கத்து வீட்டு பையன் போல் மணிகண்டன் கலக்கிய 5 படங்கள்.. மறக்கவே முடியாத ஜெய்பீம் ராசக்கண்ணு

Trending News