சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

சலார் படத்தை அலங்கரிக்கும் 4 தமிழ் நடிகர்கள்.. குக் வித் கோமாளி மூலம் கிடைத்த வாய்ப்பு

Salaar Movie: கேஜிஎஃப் படத்தை எடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து பிரபாஸை வைத்து சலார் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் பிரித்விராஜ், ஜெகபதிபாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆகப்போகிறது.

இப்படத்தை 400 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் பொழுது கேஜிஎஃப் படத்தையே ஓரம் கெட்டும் அளவிற்கு மிரட்டலாக இருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படத்திற்குப் பிறகு பெருசாக சொல்லும் படியாக எந்த படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

கடைசியாக நடித்த ஆதிபுரூஸ் படமும் காலை வாரிவிட்ட அளவிற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பிரபாஸை வைத்து ட்ரோல் பண்ணும் அளவிற்கு கிண்டல் அடிக்கப்பட்டது. இதையெல்லாம் தகர்த்து எறியும் வகையில் இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் பிரபாஸ் இருக்கிறார். மேலும் இதில் பிரித்விராஜின் நடிப்பு தூக்கலாகவும், நட்பின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி காட்டப்பட்டிருக்கிறது.

Also read: தலையை சுற்ற வைக்கும் பிரபாஸின் சொத்து மதிப்பு.. 44 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

சலார் படத்தை அலங்கரிக்கும் 4 தமிழ் நடிகர்கள்

இதனைத் தொடர்ந்து இப்படத்தை இன்னும் மெழுகேற்றும் விதமாக ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா, ஜான் விஜய் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் பெரிசாக வாய்ப்பு இல்லை என்றாலும் அக்கட தேசத்தில் உச்சாணி கொம்பிற்கு போய்விட்டார். அதனால் தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

அடுத்ததாக மைம் கோபி தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். இதில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் சான்ஸை பெற்றுக் கொண்டார். அதனால் சலார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பதான், ஜவான் 1000 கோடி வசூல் செஞ்சாச்சு.. ஷாருக்கானின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஆப் அடிக்கும் பிரபாஸ்

Trending News