சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் பிச்சைக்காரனாக மாறிய 4 பிரபலங்கள்.. குடியினால் மானம் இழந்த சின்னத்தம்பி நடிகர்

4 Tamil celebrities who became beggars: ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம் ஆர் ராதா “கலை!கலை!” என கொந்தளித்து மது, மாது இவற்றிற்கு அடிமையாகி இறுதியில் தன்னிலை இழந்து பிச்சைக்காரர் ஆகி மரணித்திருப்பார். அது போலவே சினிமா என்னும் மாயவலையில் சிக்கி சின்னாபின்னமானவர்கள் ஏராளம்.

கவுண்டமணி பேட்டி ஒன்றில் கூறியது போல் சினிமாவுக்குள் செல்ல அவமானத்தையும் அதிர்ஷ்டத்தையும் சந்திக்க நேர்ந்தாலும், திறமை ஒன்று இல்லாவிடில் விரைவில் வெளியேற வேண்டியதுதான்! சினிமாவில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை பிடித்து மேல் எழும்பி தக்க வைக்க முடியாமல் வாழ்க்கையை தொலைத்தவர்கள்  பிச்சைக்காரர்களாக திரியும் அவலம் அரங்கேறி உள்ளது அவர்களில் சிலர்,

பல்லு பாபு: 2004 வெளிவந்த காதல் திரைப்படத்தில், முன் பற்கள் சற்று தெத்திய நிலையில் விருச்சிககாந்த் என்று அறிமுகத்தோடு வாய்ப்பு தேடி நடித்து பிரபலமானவர். அதற்குப்பின் வாய்ப்பற்ற நிலையில் மதுவிற்கு அடிமையாகி பிச்சைக்காரன் ஆகி இறந்து சடலத்தை கூட யாரும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அனாதையாகி போனார்.

Also read: காமெடி நடிகர்கள் அழ வைத்த 5 படங்கள்.. ரீஎன்ட்ரியில் பின்னி பெடல் எடுக்கும் சார்லி

நிஷா நூர்: 80 ஸ்களில் பாலச்சந்தர் மற்றும் விசுவின் கல்யாண அகதிகள், அவள் சுமங்கலி தான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நிஷா நூர். தயாரிப்பாளர் ஒருவரின் கட்டாயத்தால் தவறான வாழ்க்கையில் பயணித்து எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி நாகூர் தர்காவில் கேட்பாரற்று கிடந்து இறந்து போனார் இந்த நடிகை.

உதய பிரகாஷ்: பிரபு, குஷ்பூ நடித்த சின்னத்தம்பி திரைப்படத்தில் குஷ்புவின் அண்ணன்களில் ஒருவராக நடித்திருந்த உதய பிரகாஷ், அந்த காலத்தில் ரஜினி, கார்த்திக் சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் வில்லனாக நடித்து பீக்கில் இருந்த சமயம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து பணத்தை இழந்தார். மேலும் மதுவிற்கு அடிமையாகி குடிசையில் வாழ்ந்து வந்த உதய பிரகாஷை, மீட்டு நடிகர் சங்கத்தின் சார்பாக அவருக்கு சரத்குமாரின் திவான் படத்தில் மீண்டும் நடிக்க வைத்த போதும், விட முடியாத மது பழக்கத்தினால் மானம் இழந்து இறந்தார்.

தியாகராஜன்: ஏவிஎம்மின் 150 வது படமான விஜயகாந்தின் மாநகர காவல் படத்தை இயக்கியவர் இயக்குனர் தியாகராஜன். மது, மாது இவற்றிற்கு அடிமையாக விட்டாலும், வந்த வாய்ப்புகளை தவிர்த்து முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே இயக்குவேன் என்று  தலைக்கனத்தால் முரட்டு பீசாக இருந்த தியாகராஜன், சென்னையின் தெருக்களில் அலைந்து திரிந்தவர் இறுதியில் சாலிகிராமத்தில் உள்ள வீதியில் தனியாக இறந்து கிடந்தார்.

Also read: கமலுடன் இதுவரை நடிக்காத 3 நடிகைகள்.. விடாமல் துரத்தியதால் உலகநாயகனிடம் மாட்டிக் கொண்ட ஜானகி மாமி

- Advertisement -spot_img

Trending News