திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்துக்கு செட்டே ஆகாத 4 இயக்குனர்கள்.. பாலாவுக்கு பின் கடும் தலைவலி கொடுத்தவர்கள்

4 Tamil industry directors who are not set for Ajith movie in future: வாங்கிய காசுக்கு மேல ஓவர் ஆக்டிங் பண்ணாமல் தன்னோட வேலை எதுவோ அதை திறம்பட செய்து முடிக்கும் தல அஜித் அவர்கள், எப்போதுமே இயக்குனர்களின் விருப்பத்தேர்வாக தான் இருப்பார். ரியல் லைப், ரீல் லைஃப் என பிரித்து பார்க்காமல் எப்போதும் தன்னை சார்ந்தவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கும் அஜித்திற்கு இயக்குனர்கள் சிலர் திரையில் செட்டே ஆகாமல் போய் உள்ளனர்,

சரண்:  திரையிலும் வாழ்க்கையிலும் அஜித்திற்கு பிடிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குனர் சரண். காதல் மன்னன்,அமர்க்களம் என இவரது வெற்றி படங்கள் மூலமாக அஜித்திற்கு பலமான அடித்தளத்தை அமைத்த தந்தவர் சரண். சரண் இயக்கிய ஜெமினியில் அஜித் நடிக்காதது அவர்களின் விரிசலுக்கு காரணமாக அமைந்தது. அதன் பின் இணைந்த அசல் படமும் சரியாக அமையாததால் இவர்கள் இணைய முடியாமல் போனது.

விஷ்ணுவரதன்: அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். சில தோல்வியில் இருந்த அஜித்தை பில்லா மூலம் கம்பேக் கொடுக்க வைத்த விஷ்ணுவரதன் மீண்டும் அஜித்துடன் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் அஜித் தரப்பிலிருந்து எந்த ஒரு பாசிட்டிவ் ரிப்ளை வராததுனால, இவரது கனவு மெய்ப்படாமலே உள்ளது.

Also read: கோடி கொடுத்தாலும் இந்த கேரக்டர்ல அஜித் கூட நடிக்க மாட்டேன்.. வீம்பு பண்ணும் விஜய் சேதுபதி

விக்னேஷ் சிவன்: துணிவு படத்திற்கு பின் அஜித் மற்றும் விக்னேஷ் சிவனின் கூட்டணி இணைய இருந்தது. நயன்தாராவே இறங்கி வந்து சிபாரிசு செய்தும் பல்வேறு காரணங்களால் ஏகே 62க்கு இந்த கூட்டணி கைகூடாமல் போனது பல தரப்பிலும் வருத்தத்தை உண்டாக்கியது.

மகிழ்திருமேனி: குறைவான படங்கள் இயக்கி இருந்தாலும் தனது படங்களின் மூலம் அனைவரையும் பேச வைத்தவர் மகிழ்திருமேனி அவர்கள். மகிழ்திருமேனியும் அஜித்தும் விடாமுயற்சியில் இணைந்த போது அஜித்தின் ரசிகர்கள் விடாமுயற்சியில் தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது இருவருக்கும் இடையான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகாததால் விடாமுயற்சி இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

நான் கடவுள் படத்தில்  இயக்குனர் பாலா இதே போன்று அகோரி கதை என அஜித்திடம் கூறிவிட்டு படத்தை தொடங்காமல் அதிக காலம் எடுத்து இழுத்தடித்து அஜித்திற்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல் தற்போது உருவாக்கியுள்ள சூழ்நிலையால் அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆவது தாமதம் ஆகலாம் என தெரிகிறது.

Also read: சினிமாவில் அஜித்தின் நட்பு பாராட்டிய 5 பிரபலங்கள்.. ஷாலினிக்காக பற்ற வைத்து பல்பு வாங்கிய நடிகர்

Trending News