4 thriller films: என்னதான் புதுப்புது படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே செய்யாது, திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் வகையில் இருக்கும். அந்த மாதிரியான சில த்ரில்லர் படங்கள் பார்ப்பவர்களை நடுநடுங்க வைத்து சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளை காட்டி இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
ஊமை விழிகள்: அரவிந்த்ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்திக், ஜெய்சங்கர், அருண்பாண்டியன் மற்றும் பலர் நடித்து 1986 ஆம் ஆண்டு ஊமை விழிகள் த்ரில்லர் படமாக வெளிவந்தது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சிகளை அமைத்து மூன்று மணி நேரம் படத்தை ரசிக்கும் படியாக பல நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அதாவது ஹோட்டலுக்கு வரும் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
பத்திரிகையாளர்கள் தற்கொலை என்று சொல்லிய நிலையில் ஒரு நிபுணர் மட்டும் கொலை என்று கண்டுபிடிக்கும் விதமாக கதை நகரும். ஹோட்டலுக்கு வரும் பெண்களின் கண் விழிகளுக்கு மயங்கி போன சைக்கோ மர்மமான முறையில் பெண்களை கொலை செய்து விடுகிறார். இந்த சைக்கோவிற்கு உதவும் வகையில் அங்கு இருக்கும் ஊர்கிழவி தகவலை கொடுத்து விடுகிறார். இதையெல்லாம் கண்டுபிடிக்கும் விதமாக விஜயகாந்த் ஆக்ஷனில் இறங்கி சைக்கோவை அழித்து விடுவார்.
நூறாவது நாள்: மணிவண்ணன் இயக்கிய படங்களில் மிகவும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று நூறாவது நாள். இதில் விஜயகாந்த், நளினி, மோகன் மற்றும் சத்யராஜ் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது முகம் தெரியாத ஒரு மர்ம நபர் தேவியின் அக்கா கொலை செய்யப்படுவதை கனவாக காண்கிறார். அத்துடன் கனவில் வருவது எல்லாம் நடக்கும் பொழுது கணவரிடமும் மாமனாரிடமும் இதைப் பற்றி சொல்கிறார். பிறகு இவருக்கு மருத்துவர் ரீதியாக ட்ரீட்மென்ட் கொடுக்கப்படுகிறது. அத்துடன் இரண்டாவது கொள்கையை நேரில் பார்க்கும் பொழுது தேவி உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. தேவிக்கு என்ன ஆச்சு, கொலைகள் நடக்கப்போகிறது என்பது அவருக்கு எப்படி முன்கூட்டியே தெரிகிறது, கனவில் வந்த கொலைகாரர் யார் போன்ற பரபரப்பு விஷயங்களை வைத்து திரில்லராக இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல் ஸ்ரீதேவி கவுண்டமணி பாக்கியராஜ் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் கமல் நடிப்பு வில்லங்கதனமான சைக்கோ கேரக்டராக இருக்கும். அதாவது அழகான பெண்களை பார்த்ததும் அவரை காதலிப்பது போல் காதலித்து மோசம் செய்து அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து அதன் மேல் ஒரு ரோஜா செடியை வைத்து ரத்த வெறியும் பெண்கள் மீதான தீராத கோபத்தையும் வைத்து ஒரு சைக்கோ படமாக கமல் நடிப்பை கொடுத்திருப்பார்.
விடியும் வரை காத்திரு: 1981 ஆம் ஆண்டு பாக்யராஜ், சத்யகலா நடிப்பில் விடியும் வரை காத்திரு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் பாக்யராஜ் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். அதாவது சொத்துக்காக சத்தியகலாவை திருமணம் செய்துகொண்டு அவரை கொலை செய்யும் முயற்சியில் கதை மர்மமான முறையில் அமைந்திருக்கும்.