செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் தர்ஷனுக்கு திருட்டு கல்யாணத்தை பண்ணி வைக்க போகும் 4 பெண்கள்.. தோற்கப் போகும் குணசேகரன்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரனின் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத நான்கு பெண்களும் இனியும் உன்னுடைய வீட்டில் நாங்கள் இருக்க முடியாது என்று கிளம்பினார்கள். ஆனால் இவர்களை வெளியே விட்டு விட்டால் என்ன பண்ணுகிறார்கள் என்பதை கண்காணிக்க முடியாது. அதனால் அவர்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று மாஸ்டர் பிளான் போட்ட குணசேகரன் நான்கு பெண்களையும் தடுத்து நீங்க என்ன சாதிக்க விரும்புகிறீர்களோ அதை இந்த வீட்டிலே இருந்து சாதித்து காட்ட வேண்டும் என்று சவால் விட்டார்.

எல்லாத்துக்கும் துணிந்து போராட நினைத்த இந்த நான்கு பெண்களும் குணசேகரன் போட்ட சவாலுக்கு சம்மதம் தெரிவித்து அதே வீட்டில் இருந்து போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தின் முதல் வெற்றியாக நந்தினி எதிர்நீச்சல் போட்டு அவருடைய லட்சியத்தை அடைந்து விட்டார். அதாவது பிடிச்ச விஷயத்தை யார் தடுத்தாலும் நிறுத்தாமல் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப நந்தினி ஆரம்பித்த மிளகாய் பொடி பிசினஸில் முதல் ஆர்டரை வெற்றிகரமாக கொடுத்து விட்டார்.

அதனால் இரண்டாவது ஆர்டரை கொடுக்க வேண்டும் என்பதற்காக அட்வான்ஸ் ஆக 15 லட்ச ரூபாய் நந்தினிக்கு கிடைத்து விட்டது. அந்த வகையில் நந்தினி எப்படியோ எதிர்நீச்சல் அடித்து அவருடைய வெற்றியை தொட்டுவிட்டார். இதனை அடுத்து மற்றவர்களும் வெற்றி அடைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கதிர், குணசேகரனை விட ஆணாதிக்கத்தை காட்ட வேண்டும் என்பதற்காக வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் அவருடைய கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டார்.

அதனால் ஞானம், புத்தி இல்லாமல் ரேணுகாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் தர்ஷனை பொட்டி பாம்பாக அடக்கி அறிவுக்கரசி சொல்றபடி தலையாட்டும் பொம்மையாக மாற்றி விட்டார். இப்படி ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் கதிருக்கு போட்டியாக குணசேகரன் வெளியே வந்து விட்டார். ஆனால் வெளியே வந்த குணசேகரனுக்கு கதிர் பண்ணும் அட்டகாசம் எதுவும் தெரியாமல் இருக்கிறது.

அதனால் அவருடைய மொத்த கோபமும் நான்கு பெண்களின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரன் முன்னாடி கதிர் பெண்களை ஆட்டிப்படைக்கும் விஷயத்தில் கெட்டிக்காரன் என்பதை நிரூபித்து காட்டும் விதமாக வீட்டிற்கு வந்த குணசேகருக்கு ஆரத்தி எடுக்க சொல்லி நந்தினியை வலுக்கட்டாயமாக கதிர் இழுத்துட்டு வந்து அராஜகம் பண்ணுகிறார்.

அங்கே வந்த அறிவுக்கரசி உங்க வீட்டில் உள்ள பொண்ணுங்க எடுக்கலைன்னா பரவால்ல நான் எடுக்கிறேன் என்று சொல்கிறார். ஆனாலும் இந்த கதிர், அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நந்தினி எடுப்பாள் என்று சொல்லி அடிக்க கை ஓங்குகிறார். ஆனால் கதிர் இப்படி எல்லாம் செய்வதற்கு என்ன காரணம் என்றால் குணசேகரன் இருந்தால் இப்படித்தான் பிரச்சினையாகும் என்பதை பெண்கள் புரிந்து கொண்டால் அவர்களே குணசேகரனை ஜெயிலுக்குள் அனுப்பி விடுவார்கள் என்று திட்டம் போட்டு தான் கதிர் இந்த மாதிரி அடாவடி பண்ணி வருகிறார்.

இதற்கிடையில் தர்ஷன், பார்க்கவியை காதலித்த விவகாரம் நான்கு பெண்களுக்கும் தெரிந்து விட்டது. அதனால் இவர்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்த ஈஸ்வரி யாருக்கும் தெரியாமல் தர்ஷன் மற்றும் பார்கவிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவிட்டால் தர்ஷன் வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது என்பதற்காக ஜனனி கதிருக்கு எதிராக பிளான் போடப் போகிறார்.

அதே நேரத்தில் தர்ஷனும் கதிருடன் கூட்டணி வைத்திருப்பதால் தர்ஷனையும் ஏமாற்றி தான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவதற்கு ஏற்பாடு பண்ணப் போகிறார்கள். அப்படி மட்டும் ஜனனி போட்ட பிளானில் ஜெயித்து விட்டால் குணசேகரன் நிரந்தரமாக மறுபடியும் ஜெயிலுக்குள் இருக்க வேண்டியது தான். கதிரின் ஆட்டமும் கொஞ்சம் அடகுவதற்கு வாய்ப்பு இருக்கும். இன்னொரு பக்கம் எல்லா சொத்துக்களையும் கதிர் மீது எழுதி வைத்த குணசேகரனுக்கு உண்மை தெரிய வரும் பொழுது மொத்தமாக எல்லாத்தையும் இழந்து தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.

Trending News