தமிழ் சினிமாவில் காக்க காக்க படத்தின் மூலம் முரட்டு வில்லனாக பல ரசிகர்களிடமும் பிரபலமடைந்தவர் ஜீவன். அதன் பிறகு ஒரு சில கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவரது நடிப்பில் வெளியான திருட்டு பயலே மற்றும் நான் அவன் இல்லை போன்ற படங்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.
அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான மச்சக்காரன், தோட்டா மற்றும் நான் அவன் இல்லை 2 போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வி அடைந்தன. அதன் பிறகு சினிமாவை விட்டு சிறிது காலங்கள் விலகியிருந்தார்.
ஒரு சில காலத்திற்குப் பிறகு கிருஷ்ண லீலை மற்றும் ஜெயிக்கிற குதிரை போன்ற படங்கள் நடித்தார். இந்த திரைப்படங்கள் பணப் பிரச்சினையால் வெளியிட முடியாமல் இருந்தது. தற்போது வரை இந்த படங்கள் வெளிவராமல் இருக்கின்றன.
![jeevan-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/03/jeevan-cinemapettai.jpg)
நான்கு ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த ஜீவன். தற்போது வரை ஏன் ஜீவன் நான்காண்டுகளாக சினிமாவில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் என்பது தெரியாத புதிராகவே உள்ளது.
ஒரு சிலர் இவர் நடிக்கும் படங்கள் வெளிவர முடியாமல் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியாமல் போனது எனவும், ஒரு சிலர் சினிமாவை விட்டு சிறிது காலங்கள் விலகி மற்றொரு துறையில் கவனம் செலுத்தி வந்ததாகவும் நம்பக தங்க வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
தற்போது அசரீரி மற்றும் பாம்பாட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அசரீரி படத்தை புதுமுக இயக்குனரான ஜிகே இயக்குகிறார். இப்படம் அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்தில் பிரச்சினையை உருவாக்குகிறது என்பதை மையப்படுத்தி எடுத்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.