திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

40% ஷேர் வாங்க இவ்வளவு ஆட்டமா கிழவிக்கு.? சத்தம் இல்லாமல் சோலியை முடிக்க போகும் குணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியல் சமூகத்தில் ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் தங்களது சுதந்திரத்திற்காக எவ்வாறு போராடி வாழ்வில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கொண்டு இக்கதையானது அமைந்துள்ளது. குணசேகரனுக்கு எதிராக ஜனனி போலீசை அழைத்து வந்தது கதிருக்கு தெரிந்தவுடன் ஜனனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று பெரிய பிரச்சினையில் ஈடுபடுகிறார்.

Also Read: டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு நிமிடம் கூட ஜனனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று அப்பத்தாவிடம் கதிர் ஒரு மல்லுக்கு நிற்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் எவ்வளவு சொல்லியும் கேட்காத கதிர் குணசேகரன் பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் கதிர் தற்பொழுது இந்த விஷயத்தில் அவருடைய பேச்சையும் கேட்க முடியாது என்று உதாசீனப்படுத்துகிறார்.

இதனால் மிகவும் கோபமடைந்த குணசேகரன் என் பேச்சை கூட நீ கேட்க மாட்டியா என்று கதிரை சமாதானப்படுத்தி “முளைப்பாரி முளைக்கிறதுக்கு முன்னாடியே கும்மி அடிச்சிட்டு போயிறாதடா”என்று பழமொழியுடன் கதிரை அழைத்து செல்கிறார். பிறகு அப்பத்தா ஜனனி இடம் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய 40% சதவிகித பங்கு என்னிடம் உள்ளதால் தான் நான் எவ்வளவு பேசினாலும் பொறுத்துக் கொண்டு போகிறார்கள்.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

ஆனால் அந்த சொத்தில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது என்பதை இவர்களுக்கு தெரியாது என்று அப்பத்தா ஜனனியிடம் கூறுகிறார். ஆதி குணசேகரன் ஆரம்பத்தில் இருந்து தீவிர திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார். அதனைக் கதிரிடம் தற்பொழுது சொல்லி கதிரை சமாதானப்படுத்துகிறார்.அப்பத்தாவிற்கு எது ஒன்று ஆனாலும் ஜனனி போலீசில் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.

இதனால் சத்தம் இல்லாமல் அப்பத்தாவை தீர்த்து கட்டி விடலாம் என்ற எண்ணத்தில் ஆதி குணசேகரனும் கதிரும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார் போல கதைக்களமானது அமைந்துள்ளது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த குடும்பத்தில் உள்ள அனைவரின் முகமும் பயத்தில் கொலை நடுங்குவது போல் காணப்பட்டது.

Also Read: 25 வருடமாகியும் மக்கள் கொண்டாடும் சன்டிவியின் ஒரே சீரியல்.. கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளிய நடிகை

அப்பத்தா ஜனனியிடம் சொத்தில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது என்பதை மிகவும் சூட்சகமாக செல்வது மக்களிடம் அது என்ன பிரச்சனை என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சொத்தில் இப்படி பெரிய சிக்கல் இருப்பது குணசேகரன் குடும்பத்திற்கு தெரியுமா அல்லது தெரியாதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News