தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கியவர் ரவி சங்கர். ஆனால் வில்லனை தாண்டி ரவி சங்கர் நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தும் ரசிகர்களிடம் கோடிக்கணக்கான பாராட்டுக்களை வாங்கியுள்ளார்.
அண்ணனும் தம்பியும் விஜய் படத்தில் வில்லனாக நடித்து பலரிடமும் பாராட்டைப் பெற்றனர். சாய்குமார் ஆதி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பார். அவரது தம்பியான நடிகர் ரவிசங்கரும் வேட்டைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பல ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர்.
ரவி சங்கர் வேட்டைக்காரன், ஆதிபகவன் சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். இவர் கிட்டத்தட்ட 4000 மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
அதில் தமிழ் மற்றும் தெலுங்கில் 1000 படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இவர் கிட்டத்தட்ட டப்பிங் குரலுக்கு மட்டுமே 15 மேல் விருதுகள் வாங்கி சாதனை படைத்துள்ளார்.
விஜய் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரிட்சயமான ரவி சங்கர் பல ரசிகர்கள் கொண்டாடிய குரலுக்கு சொந்தக்காராகவும் இருந்துள்ளார். அதாவது கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருக்கும் வித்யாதிற்கு ரவி சங்கர் குரல் கொடுத்துள்ளார். பகவதி, குருவி என இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுக்கும் இவர் தான் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
சாயாஜி ஷிண்டேவிற்கும் போக்கிரி படத்தில் போலீசாக நடித்திருக்கும் முகேஷ் திவாரிக்கும் ரவிசங்கர் தான் குரல் கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு வில்லனுக்கும் தனது குரலால் வித்தியாச வித்தியாசமாக டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
அருந்ததி படத்தில் அனைவரிடமும் புகழ்பெற்ற வசனமான “அடியே அருந்ததி” எனும் வசனத்திற்கு ரவி சங்கர் தான் டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இதுவரை பலருக்கும் இவரது டப்பிங் செய்த சாதனைகள் தெரியாது.