வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தேசிய விருது வாங்கிய நடிப்பு அரக்கி.. 41 வயதில் கிளாமர் குயினாக மாறி கிரணுக்கு கொடுக்கும் டஃப்

Actress Kiran: ஒரு காலத்தில் கமல், விக்ரம், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை கிரணின் நிலை தற்போது முற்றிலுமாக மாறி இருக்கிறது. ஒரு நிலைக்குப் பிறகு இவருக்கான ஹீரோயின் வாய்ப்புகள் குறையவே ஒரு பாடலுக்கு ஆடுவது, அம்மா கதாபாத்திரம் என நடித்து வந்தார்.

அதை தொடர்ந்து மேலும் சில வாய்ப்புகளை பிடிப்பதற்காகவும், கஷ்டப்படாமல் சம்பாதிப்பதற்காகவும் இவர் தேர்ந்தெடுத்த ஒரு துருப்பு சீட்டு தான் சோசியல் மீடியா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் அதை ஒரு பிசினஸ் ஆகவே மாற்றி கல்லாகட்டி வருகிறார்.

Also read: 2 நடிகைகளை ஓரங்கட்டி அறிமுகமான மீரா ஜாஸ்மின்.. ரன் படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாலிவுட் ஹீரோயின்

தற்போது இவருக்கு சவால்விடும் வகையில் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை ஒருவரும் கிளாமர் குயினாக மாறி இருக்கிறார். ரன், சண்டைக்கோழி போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நடிப்பு அரக்கி என்று சொல்லும் அளவுக்கு இவருடைய பெர்ஃபார்மன்ஸ் இருக்கும். அப்படிப்பட்ட சிறந்த நடிகையான இவர் இப்போது இந்த அளவுக்கு இறங்கி இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்வது மட்டுமல்லாமல் வருத்தத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.

Also read: முதல் படம் மரண ஹிட், தற்போது காணாமல் போன 6 நடிகைகள்.. கவர்ச்சியால் சினிமாவை வெறுத்த மீரா ஜாஸ்மின்

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்பதற்கு ஏற்ப வாய்ப்பு இல்லாமல் இருக்கும் பல நடிகைகள் கிளாமர் என்ற ஆயுதத்தை தான் பயன்படுத்துகிறார்கள். அதை தற்போது கையில் எடுத்திருக்கும் மீராஜஸ்மின் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பலரையும் வாயடைக்க செய்யும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குடும்ப குத்து விளக்காக வசீகர முகத்துடன் இருந்த இவரா இந்த அளவுக்கு இறங்கி விட்டார் என பலரும் அதிசயத்து போகின்றனர். தற்போது 41 வயதாகும் மீரா ஜாஸ்மின் இதன் மூலம் சில தமிழ் மற்றும் மலையாள வாய்ப்புகளையும் பிடித்திருக்கிறார். அதை வைத்தே மீண்டும் ஒரு ரவுண்டு வரவும் அவர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read: நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்த 5 நடிகைகள்.. திரிபுரசுந்தரி ஆக ஊர்வசி அடித்த லூட்டி

Trending News